நடிகர் கமல்ஹாசன் இயக்குனர் மணி ரத்னத்துடன் ''நாயகன்' படத்துக்குப் பின் 34- ஆண்டுகளுக்கு பிறகு 'தக் லைப்' என்ற படத்தில் இணைந்துள்ளார்
இப்படத்தில் கமல்ஹாசனுடன் , த்ரிஷா, நாசர், அபிராமி, கௌதம் கார்த்திக், ஜோஜு ஜார்ஜ், உள்ளிட்ட பலர் நடித்து உள்ளனர்
மேலும் இப்படத்திலிருந்து ஜெயம் ரவி துல்கர் சல்மான் ஆகியோர் விலகியதாகவும், அதற்கு பதில் சிம்பு நடிக்கவிருப்பதாகவும் தகவல் வெளியானது
தொடர்ந்து ஜெயம் ரவி துல்கர் மீண்டும் இணைந்துள்ளதாக கூறப்பட்ட நிலையில் தற்போது பாலிவுட் பிரபலங்கள் பங்கஜ் திரிபாதி, அலி ஃபசல் ஆகியோர் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.