கழிப்பறையில் நீண்ட நேரம் உட்கார்ந்து செல்போன்களை பயன்படுத்தினால் மூலநோய் ஏற்படுவதற்கான அபாயம் உள்ளது என்று ஆராய்ச்சியில் தெரிவித்துள்ளனர்.
மூலநோய் என்பது ஆசனவாய் மற்றும் கீழ் மலக்குடலில் உள்ள இரத்த நாளங்கள் வீங்கி, வலி, அரிப்பு மற்றும் இரத்தப்போக்கு போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும் ஒரு நிலை.
மலச்சிக்கல், கர்ப்பம், அதிக எடை, நாள்பட்ட வயிற்றுப்போக்கு போன்றவையும் மூலநோய் வருவதற்கான காரணிகளாகும்.
ஆனால் கழிப்பறையில் செல்போன் பயன்படுத்துவதால், நீங்கள் அதிக நேரம் அங்கே செலவழிக்க நேரிடும்.
இதனால், மலக்குடலில் உள்ள இரத்த நாளங்களில் அழுத்தம் அதிகரித்து, மூலநோய் வருவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும்.
மேலும் மலச்சிக்கல் மற்றும் பிற செரிமானப் பிரச்னையை ஏற்படுத்த கூடும். இதனால் ஆசனவாயில் அழுத்தம் ஏற்பட்டு வலி உண்டாகலாம்.
இதையும் மீறி நீங்கள் செல்போனுடன் கழிப்பறையில் நீண்ட நேரம் செலவழித்தால் ஆசனவாய்ப் பகுதியில் அழுத்தம் ஏற்பட்டு அது மூலநோயை உண்டாக்கும்.
கூடவே கழிப்பறை இருக்கைகளைவிட பத்து மடங்கு அதிகமான கிருமிகளை, ஸ்மார்ட்போன்கள் எடுத்துச் செல்ல முடியும் அதனால் கிருமி தொற்றும் அதிகம் ஏற்படும் அபாயம் உள்ளது.