பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்களுக்கு பரீட்சையமானவர் பாலாஜி முருகதாஸ். இவர் தற்பொழுது ஃபயர் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.
இப்படம் 2020 ஆம் ஆண்டு நடந்த நாகர்கோவில் காசி என்ற வழக்கை மையப்படுத்தி அமைக்கப்பட்டுள்ளது. படத்தின் டீசர் தற்பொழுது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
காசி என்பவர் காம பித்து பிடித்தவன். பெண்களை பாலியல் வன் கொடுமை செய்து அதை படம் பிடித்து அவர்களிடம் மிரட்டி பணம் பறிக்கும் ஒரு குணமுடையவன்.
இக்கதாப்பாத்திரத்தில் பாலாஜி முருகதாஸ் நடித்துள்ளார். இவருடன் சந்தினி தமிழரசன், ரச்சிதா மஹாலட்சுமி, சாக்ஷி அகர்வால், காயத்திரி சான், சிங்கம் புலி மற்றும் பலர் நடித்துள்ளனர்.