சின்னத்திரையில் தனது காமெடியால் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் பாலா
கலக்கப்போவது யாரு எனும் நிகழ்ச்சி மூலம் திரையுலகிற்கு அறிமுகமான பாலா குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி மூலம் புகழ் பெற்றார்
தொடர்ந்து பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்
இவர் நடிப்பதோடு மட்டுமல்லாமல் பல குழந்தைகளின் படிப்பிற்கு உதவி வருகிறார். மேலும், பல சமூக சேவையும் செய்து வருகிறார்
இந்நிலையில் சென்னையில் மிக்சாங் புயலால் பாதிக்கப்பட்ட 200 குடும்பங்களுக்கு தனது சொந்த செலவில் ரூபாய் 1000 பண உதவி செய்துள்ளார்
KPY பாலாவின் இந்த செயலுக்காக மக்களும் ரசிகர்களும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்