தனது 19வது வயதில் இயக்குனர் சங்கரிடம் உதவி இயக்குனராக சேர்ந்து எந்திரன் மற்றும் நண்பன் படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியவர் அட்லீ
இதைத்தொடர்ந்து ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான அட்லீ தொடர்ந்து தெறி, மெர்சல், பிகில் போன்ற வெற்றி படங்களை இயக்கியுள்ளார்
கடந்த 2023ஆம் ஆண்டு ஷாருக்கான் தீபிகா படுகோன் நடிப்பில் “ஜவான்” படத்தின் மூலம் பாலிவுட்டில் காலடி எடுத்து வைத்தார் இப்படம் 1000 கோடி வசூலை குவித்து இந்தி திரையுலகின் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது
இந்நிலையில் புதுதில்லியில், நேற்று NDTV-ன் “இந்தியன் ஆஃப் தி இயர்” விருது வழங்கும் விழாவில் சிறந்த இயக்குனருக்கான விருதை அட்லீ வென்றார்
மத்திய அமைச்சர் ஹர்தீப் புரி அட்லீக்கு விருதை வழங்கி கவுரவித்தார்.