பிரபல நடிகரும் நடன இயக்குனருமான பிரபு தேவா கதாநாயகனாக ஏ.ஆர். ரகுமான் இசை கூட்டணியில் புதிய படத்தை 'பிகைண்ட்வுட்ஸ்' சார்பில் மனோஜ் தயாரித்து, இயக்க உள்ளார்.
25 ஆண்டுகளுக்கு பிறகு பிரபு தேவா- ஏ.ஆர் ரகுமான் இந்த திரைப்படம் மூலம் மீண்டும் இணைகின்றனர்.
இப்படத்தில் இசை, நடனம், பாடல்கள், நகைச்சுவை என முற்றிலும் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்து உள்ளன.
காமெடி நடிகர் யோகி பாபு இதில் வித்யாசமான கதாபாத்திரத்தில் நடிக்க மலையாள நடிகர்களான அஜ்ஜு வர்கீஸ் மற்றும் அர்ஜுன் அசோகன் ஆகியோரும் நடிக்கவுள்ளனர்.