பிரபல நடிகர், தயாரிப்பாளர் மற்றும் இயக்குநருமான அர்ஜுன் சர்ஜா நீண்ட இடைவேளைக்குப் பிறகு, மீண்டும் இயக்குநராகக் களமிறங்குகிறார்.
சீதை எனும் பாத்திரத்தில் வலிமை, நெகிழ்ச்சி மற்றும் கருணை ஆகியவற்றின் உருவமாக நடிகை ஐஸ்வர்யா அர்ஜுன் நடிக்கிறார்.
மனதை இலகுவாக்கும் ஒரு மென்மையான படைப்பாக உருவாகும் இப்படத்திற்கு 'சீதா பயணம்' எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இந்தப் படத்தில் கன்னட நடிகர் உபேந்திராவின் உறவினர் நிரஞ்சன் சுதீந்திரா கதாநாயகனாக தமிழில் அறிமுகமாகிறார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளது படத்தின் மற்ற விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாக இருக்கிறது.