உடல் எடையை குறைக்கும் எண்ணத்தோடு கடுமையாக உடற்பயிற்சி செய்யும் இளைஞர்கள், இந்த விஷயங்களிலும் கவனம் செலுத்தினால் உடல் எடையை எளிதாக குறைத்துவிடலாம்.
தினமும் கீரை சாப்பிடுங்கள்
அடர் பச்சை நிறங்கள் கொண்ட காய்கறிகள், கீரைகள் தினமும் சாப்பிட வேண்டும். மிகக் குறைந்த கலோரியும் அதிகப்படியான நார்ச்சத்துக்களும் இருப்பதால் விரைவில் பசி எடுக்காது.
புரதங்கள் நிறைந்த ஸ்நாக்ஸ்
எண்ணெயில் பொரித்த உணவுகளை எடுக்கக் கூடாது. மக்கானா, நட்ஸ் போன்ற நார்ச்சத்தும் புரதங்களும் கொண்ட ஸ்நாக்ஸ்களை சாப்பிடுங்கள்.
தாவர அடிப்படையிலான புரதங்கள்
அசைவ உணவுகளை விரும்பி சாப்பிடுகிறவராக இருந்தாலும் வாரத்துக்கு மூன்று நாள் முழுமையான சைவ உணவுக்கு மாறுங்கள். உங்களுடைய எடை குறைப்பில் உங்களுக்கே நல்ல வித்தியாசம் தெரியும்.
உடற்பயிற்சி அவசியம்
குறைவான கலோரி உணவுகள் எடுத்துக் கொள்ளும்போது தசைகள் தளர ஆரம்பிக்கும். அவற்றை தடுத்து தசைகளை வலிமையாக வைத்திருக்க உடற்பயிற்சி மிக அவசியம். எலும்புகளையும் உறுதியாக வைத்திருக்க உதவும்.