சிவப்பு மிளகாய் பற்றி உங்களுக்குத் தெரியாத சுவாரஸ்ய விஷயங்களை பார்க்கலாம்.
உலகம் முழுவதிலும் மிகப் பிரபலமான ஒரு உணவுப்பொருள் என்றால் அது சிவப்பு மிளகாய் தான்.
சிவப்பு மிளகாயில் பல்வேறு ஊட்டச்சத்துகள், ஆன்டி ஆக்சிடெண்ட் மற்றும் வைட்டமின் C சத்து உள்ளன. இவை உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகின்றன.
சிவப்பு மிளகாயில் உள்ள காப்சைசின் என்னும் பயோஆக்டிவ் என்னும் உயிரிமுனைப்புக் கொண்ட ஒரு தாவர கூறு பல்வேறு அற்புத ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டது.
சிவப்பு மிளகாய் சேர்க்கப்பட்ட மசாலாப்பொருள் உணவு நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தவும், எடை இழப்பை ஊக்குவிக்கவும், ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.
வைட்டமின், மினரல் மற்றும் ஆன்டிஆக்ஸிடெண்ட் போன்றவை அதிகம் இருப்பதால், நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து, வளர்சிதை மாற்றத்தை வேகப்படுத்தி, அழற்சியை எதிர்த்து போராடுகிறது.
சிவப்பு மிளகாய் ஒரு இயற்கையான நுண்ணுயிர் எதிர்ப்பியாகும், உணவை பாழ்படுத்தும் கிருமிகள் மற்றும் நுண்ணுயிர்களை கொல்லும் தன்மைக் கொண்டவை.
தொடர்ந்து சிவப்பு மிளகாயை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்வது என்பது ஒரு ஆரோக்கியமான தேர்வாகும்.