கொய்யா பழத்தில் இவ்வளவு நன்மைகள் இருக்கா..தெரிஞ்சுக்கலாம் வாங்க...
உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது. எனவே இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம்.
தினமும் 2 கொய்யா பழங்கள் சாப்பிட்டு வந்தால், அது நம் உடலின் தேவையில்லாத கொழுப்பைக் குறைத்து, உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.
பொட்டாசியம் இரத்த அழுத்தத்தை சீராக்க உதவுகிறது, அதே நேரத்தில் நார்ச்சத்து கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது, இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது.
சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்கவும், தைராய்டு பிரச்னையைத் தடுக்கவும் சிறந்த மருந்தாக உள்ளது.
வைட்டமின் C சத்துக்களை, அதிகமாக கொண்டுள்ளதால், வைட்டமின் C மாத்திரைகளை எடுத்துக் கொள்பவர்கள், இந்த கொய்யா பழத்தினை சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.
கொய்யா பழத்தில் உள்ள வைட்டமின் A, சளித்தொல்லை மற்றும் குடல் தொடர்புடைய குறைகளை சரிசெய்து, பார்வைத் திறனை மேம்படுத்த உதவுகிறது.
கொய்யா பழம் சாப்பிடுவதால், அது ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்து, பாக்டீரியா தொற்றிலிருந்து நம்மை பாதுகாக்கிறது.
கொய்யா பழத்தில் உள்ள சத்துக்கள் நம் உடலின் திசுக்களைத் தாக்கும் புற்றுநோய்க்கு எதிராக செயல்பட்டு, புற்றுநோய் வராமல் தடுக்கிறது.
கொய்யாவை உண்பதால் வயிறு, குடல், இரைப்பை, கல்லீரல் மற்றும் மண்ணீரல் போன்றவை வலுப்பெறும். ஜீரணக் கோளாறுகளைக் குணப்படுத்துகிறது.
கொய்யாப்பழத்தை சாப்பிடும் போது, வெட்டிச் சாப்பிடுவதை விட கடித்துச் சாப்பிடுவதால், அதனுடைய முழுமையான பலனை பெறலாம்.
தொடர்ந்து WEB STORY-யை படிக்க LINK-ஐ க்ளிக் செய்யவும்---> https://www.maalaimalar.com/web-stories