இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் தமன்னா, சுந்தர் சி, ராஷி கண்ணா யோகிபாபு நடிப்பில் வெளியாகவிருக்கும் திரைப்படம் அரண்மனை 4
இப்படத்தில் நடிகை தமன்னா பேய் வேடத்தில் நடித்துள்ளார் இதன் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது
இதில் கலந்துகொண்ட தமன்னா பேசியபோது, “படத்தில் திகில் பேய் வேடத்தில் நடித்த போது எனக்கு எந்தவித பயமும் ஏற்படவில்லை,
ஆனால் தற்போது டிரைலரில் அந்த காட்சியைப் பார்க்கும் போது மிகவும் பயந்து விட்டேன் இசையின் வேகம் பிரமிப்பை ஏற்படுத்துகிறது” என்றார்