இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டி20 இறுதிப் போட்டியில் இந்தியா 7 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று 17 வருடங்களுக்கு பிறகு ஐசிசி உலகக் கோப்பையை வென்றுள்ளது.
இந்த வரலாற்று வெற்றியை கொண்டாட திரைப்பிரபிலங்களில் இருந்து அரசியல் பிரபலங்கள் வரை இந்திய அணியை பாராட்டி சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்
இந்திய அணியை பாராட்டும் வகையில் இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான் அவரது ஒரு பாடலை பரிசாக வழங்கியுள்ளார்.
டீம் இந்தியா ஹை ஹும் என்ற தலைப்பிடப்பட்ட இந்த பாடலின் யூடியூப் லிங்கை பதிவிட்டு ஏ.ஆர் ரகுமான் அவரது எக்ஸ் பக்கத்தில் இந்தியா அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்