அன்புமணி ராமதாஸ் - சவுமியா தம்பதிக்கு சங்கமித்ரா, சம்யுக்தா, சஞ்சுத்ரா என 3 மகள்கள் இருக்கிறார்கள்.
இவர்களில் சங்கமித்ரா தற்போது அலங்கு என்ற திரைப்படத்தின் மூலம் தற்போது சினிமா தயாரிப்பாளராக மாறியுள்ளார்.
புலம்பெயர்ந்து தொழில் செய்யும் பழங்குடியினரின் வாழ்க்கையை பதிவு செய்யும் அலங்கு என்ற திரைப்படத்தை S.P. சக்திவேல் இயக்கி இருக்கிறார்.
ஆக்சன் த்ரில்லர் டிராமாவாக உருவாகி இருக்கும் இத்திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் கதை நாயகனாக குணாநிதி நடிக்கிறார்.