சிவா இயக்கத்தில் சூர்யா நடித்த கங்குவா படம் சமீபத்தில் திரைக்கு வந்து எதிர்மறை விமர்சனங்களை எதிர்கொண்டது.
சூர்யாவின் மனைவியும் நடிகையுமான ஜோதிகா கங்குவா படத்துக்கு எதிரான விமர்சனங்களை கண்டித்தார்.
இது பரபரப்பானது. இந்த நிலையில் ஜோதிகாவின் பதிவை நடிகை அமலாபால் தனது வலைத்தள பக்கத்தில் பகிர்ந்து அவரது கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
மேலும் அமலாபால் வெளியிட்டுள்ள பதிவில், "கங்குவா படத்தை விமர்சிக்கின்றனர். சினிமா துறையில் படைப்பாற்றல் மற்றும் புதுமையான முயற்சிகளை வரவேற்க வேண்டும்.
தயாரிப்பாளரின் உழைப்பை பாராட்ட வேண்டும்'' என்று குறிப்பிட்டு உள்ளார்.