தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் அல்லு அர்ஜூன். இவர் நடிப்பில் உருவாகி இருக்கும் புஷ்பா 2 திரைப்படம் அடுத்த வாரம் வெளியாக இருக்கிறது.
புஷ்பா 2 படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் இந்தி மொழியிலும் வெளியாகிறது.
இந்தப் படத்தின் இந்தி பதிப்பில் அல்லு அர்ஜூன் கதாபாத்திரத்திற்கு நடிகர் ஸ்ரேயஸ் தால்பேட் டப்பிங் செய்துள்ளார்.
இது குறித்து பேசிய அல்லு அர்ஜூன், இனி இந்தி படங்களில் நடிக்கவே கூடாது என முடிவு செய்துள்ளேன். அது மிகவும் கடினமாக இருக்கிறது.
என் வாழ்நாளில் ஒன்றிரண்டு இந்தி படங்களில் மட்டுமே நடிப்பேன் என்று நினைக்கிறேன் என்று கூறினார்.