தமிழில் ஆடுகளம் படத்தின் மூலம் அறிமுகமானவர் டாப்சி. இதைத் தொடர்ந்து இவர் தமிழ் படங்களிலும் பாலிவுட்டிலும் நடித்து வருகிறார்
கடந்த ஆண்டு டிசம்பரில் ஷாருக்கான் நடித்து வெளியான டங்கி படத்திலும் டாப்சி முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்
இந்த நிலையில், டாப்சிக்கு விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது
தனது நீண்டகால நண்பரும், பேட்மின்டன் வீரருமான மத்யாஸ் போ என்பவரை டாப்சி திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தெரிகிறது.