1990 கால கட்டங்களில் தமிழ் திரை உலகில் முன்னணி கதாநாயகியாக திகழ்ந்தவர் தேவயானி.
திருமணத்துக்கு பிறகும் படங்களில் நடித்து வந்த தேவயானி 'காதலுடன்' என்ற படத்தை தயாரித்து திரை உலகில் தயாரிப்பாளராக உருவெடுத்தார்.
நடிகை, தயாரிப்பாளர், விவசாயி, ஆசிரியை என்ற பன் முகங்களை கொண்ட தேவயானி தற்போது இயக்குனர் பணியில் ஆர்வம் கொண்டு இயக்குனர் பயிற்சி வகுப்பில் சேர்ந்து படிக்கின்றார்.
அடுத்ததாக சினிமாவில் புதிய படம் ஒன்றை இயக்கி இயக்குனர் அவதாரம் எடுக்க இருக்கிறார் தேவயானி.