சிவகார்த்திகேயன் படத்துக்கு 'பராசக்தி' தலைப்பு- நடிகர்கள் கண்டனம்
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் படம் 'பராசக்தி'.
படத்தின் தலைப்புக்கு சிவாஜி ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து தலைப்பை மாற்றுமாறு அறிக்கை வெளியிட்டதுடன் சென்னை நகரம் முழுவதும் கண்டன போஸ்டரை ஒட்டியிருந்தனர்.
ஒய்.ஜி.மகேந்திரன் கூறுகையில்,ஏன் அந்த தலைப்பை வைக்க வேண்டும். ஒரு சரித்திர படத்தின் தலைப்பை வைக்கிறோமே என அவர்களாகவே தவிர்த்திருக்க வேண்டும் என்றார்.
இது பற்றி நடிகர் பார்த்திபன் கூறுகையில், இந்த தலைப்பு மீண்டும் வைத்ததில் எனக்கு உடன்பாடு இல்லை. புதுசா டைட்டில் யோசிக்கலாமே தவிர, இருக்கிற பழைய டைட்டில் வைப்பது முறையல்ல. இதற்கு பலர் எதிர்ப்பு சொல்கிறார்கள். பார்த்தீர்களா? என்றார்.
இயக்குநர் வெங்கடேஷ் கூறுகையில், தமிழ் சினிமாவின் லெஜெண்ட் என்றால் சிவாஜி கணேசன் தான். அவர் நடித்த முதல் திரைப்படம் 'பராசக்தி'. இந்த படம் தமிழ் சினிமாவின் அடையாளமாக இருக்கிறது. தமிழ் சினிமாவில் வேற தலைப்பே இல்லையா? விளம்பர நோக்கத்துக்காக இந்த தலைப்பு வைக்கப்பட்டுள்ளதோ என தோன்றுகிறது என கூறியுள்ளார்.