இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் GOAT
இப்படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சவுத்ரி, மோகன் போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.
தற்பொழுது படக்குழுவினர் கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள க்ரீன் ஃபீல்ட் ஸ்டேடியத்தில் படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர்.
9 வருடங்களுக்கு பிறகு படப்பிடிப்பிற்காக விஜய் கேரளா சென்றுள்ள நிலையில், கேரள விமான நிலையத்தில் இருந்தே ரசிகர்கள் அவரின் காரை சூழ்ந்து அன்பை வெளிப்படுத்தினர்
இந்நிலையில், நேற்று ரசிகர்களை காண சென்ற விஜய் அவர்களிடம் மலையாளத்தில் பேசியதும், இன்று மாற்றுத்திறனாளி ரசிகருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டதும் தற்போது வைரலாகி வருகிறது.