பல சர்ச்சைகளை தாண்டி அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் திறப்பு விழா நாளை (22-01-2024) நடைபெறுகிறது
இந்நிலையில் நடிகர் ரஜினி இன்று காலை மனைவி லதா மற்றும் பேரன் ஆகியோருடன் சென்னையில் இருந்து விமானம் மூலம் அயோத்திக்கு புறப்பட்டு சென்றார்.
விமானநிலையத்தில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவா் “500 வருட பிரச்சனைக்கு சுப்ரீம் கோர்ட் மூலம் தீர்வு கிடைத்துள்ளது இது வரலாற்றில் மறக்க முடியாத நிகழ்ச்சி இதில் பங்கேற்பதில் மகிழ்ச்சியாக உள்ளது” என தெரிவித்தார்.