தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவர் பிரபாஸ் இவர் பாகுபலி படத்தின் மூலம் பான் இந்தியா ஹீரோவாக புகழ்பெற்றார்
தற்போது இவர் விஷ்ணு பகவானின் பத்தாவது அவதாரமான கல்கி அவதாரத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வரும் கல்கி2898 ஏடி என்ற படத்தில் நடித்து வருகிறார்
இந்நிலையில் நடிகர் பிரபாஸ் கல்கி படத்தின் படப்பிடிப்பில் தினந்தோறும் அசைவம் சாப்பிடுவதாக கூறி ஒரு சர்ச்சை எழுந்துள்ளது
பிரபல பாலிவுட் விமர்சகர் கமல் ஆர் கான் {கேஆர்கே} தனது எக்ஸ் தளத்தில் கடவுள் அவதாரத்தில் நடிக்கும் பிரபாஸ் இவ்வாறு அசைவம் சாப்பிடுவது தவறு என்று பதிவிட்டுள்ளார்