சமீபத்தில் வெளியான குட்நைட் படத்தில் தனது எதார்த்த நடிப்பின் மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்தவர் மணிகண்டன்
தற்போது இவர் எஸ்.வினோத்குமார் தயாரிப்பில், ராஜேஷ்வர் காளிசாமி இயக்கும் புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார் இதில் இவருக்கு ஜோடியாக சான்வே மேகனா நடிக்கவுள்ளார்
ஒரு சாதாரண நடுத்தர குடும்பத்து இளைஞன் தன் மானத்திற்காகவும், தன் குடும்பத்தின் நலனுக்காகவும் எதிர்கொள்ளும் சவால்களும் சாகசங்களுமே இத்திரைப்படத்தின் மையக்கருவாகும் இந்த திரைப்படம் கோயம்புத்தூரில் படமாக்கப்பட இருக்கிறது
படத்தின் கதை நம் குடும்பங்களில் நடக்கக்கூடிய நிகழ்வுகளின் அடிப்படையில் நகைச்சுவையும் சுவாரசியங்களும் நிறைந்ததாக அமைந்திருப்பதால் கொண்டாடும் வெற்றிப்படமாக அமையும் என்று எதிர்பார்க்கலாம்.