நடிகர் கார்த்தி பிறந்தநாள்- சிறப்பு போஸ்டரை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்த படக்குழு

நடிகர் கார்த்தி பிறந்தநாள்- சிறப்பு போஸ்டரை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்த படக்குழு

Published on
நடிகர் கார்த்தி இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் "வா வாத்தியார்" படத்தில் நடித்து வருகிறார்.
கார்த்தி நடிக்கும் 26வது படமாக 'வா வாத்தியார்' உருவாகி வருகிறது. இந்தப் படத்தில் நடிகர் கார்த்தி எம்.ஜி.ஆர். ரசிகனாக நடிக்கிறார்.
சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் மற்றும் முதல் பாடல் ரசிகர்களிடைய வரவேற்பை பெற்றது.
நடிகர் கார்த்தி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
இதையொட்டி 'வா வாத்தியார்' படக்குழுவினர் அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் சிறப்பு போஸ்டரை வெளியிட்டுள்ளது.
இதே போல் நடிகர் கார்த்தி மற்றும் இயக்குநர் பி.எஸ். மித்ரன் கூட்டணியில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற திரைப்படம் 'சர்தார்.' இதை தொடர்ந்து சர்தார் 2 பாகம் உருவாகி வருகிறது.
கார்த்தி-க்கு வாழ்த்து தெரிவித்து சர்தார் 2 படக்குழு புது போஸ்டர் வெளியிட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com