இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்து வரும் திரைப்படம் விடாமுயற்சி
இப்படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் விருவிருப்பாக நடைபெற்று வருகிறது.
தற்போது அஜித்துடன் நடிகை திரிஷாவும் அஜர்பைஜான் சென்றதால் இப்படத்தில் திரிஷா நடிப்பது உறுதி செய்யப்பட்டது
இந்நிலையில் நடிகர் ஆரவ் தனது சமூக வலைதளத்தில் அஜித் மற்றும் அர்ஜூன் உடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்
இதைத்தொடர்ந்து அர்ஜூன் விடாமுயற்சி படத்தில் இணைந்திருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்
இதற்கு முன்பு அர்ஜூன் அஜித் கூட்டணியில் மங்காத்தா திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது