விளம்பர படங்களில் தமிழ், தெலுங்கு, இந்தி நடிகர்- நடிகைகள் ஆர்வத்துடன் நடித்து வருகின்றனர்.
தமிழில் நயன்தாரா, திரிஷா, உள்பட முன்னணி நடிகைகள் அதிக படங்களில் நடித்து வருகின்றனர்.
விளம்பர படங்களில் நடிப்பதற்கு அவர்கள் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு வாங்கிய ஊதியத்தை விட பல மடங்கு உயர்த்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்தி நடிகை மாதுரி தீட்சித் 8 மணி நேரம் மட்டும் நடிப்பதற்கு ரூ.1 கோடியும், கியாரா அத்வானி ஒரு நாளைக்கு ரூ.1.5 கோடி முதல் ரூ.2 கோடி வரையும் சம்பளம் பெறுவதாக கூறப்படுகிறது.
நடிகை நயன்தாரா ரூ.5 கோடியும், முன்னணி நடிகர்கள் ரூ. 8 கோடியும்,
ரூ.35 லட்சம் வாங்கிய அல்லு அர்ஜூன் ரூ.6 கோடியும் சம்பளம் பெறுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இது போன்று ஜூனியர் என்.டி.ஆர்., ஆலியாபட், கரீனா கபூர், ரகுல் பீரித்சிங் ஆகியோர் சம்பளத்தை உயர்த்தியதாக கூறப்படுகிறது.