கடந்த 2018-ம் ஆண்டு பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி- திரிஷா நடிப்பில் வெளியான படம் '96'.
பள்ளிப் பருவ காதலர்கள் 20 ஆண்டுகளுக்கு பின் சந்திக்கும் போது என்ன நடக்கும் என்பதை மிகவும் யதார்த்தமாக காட்டிய படம் '96'.
இந்த நிலையில், '96' படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குனர் பிரேம் குமார் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
விஜய் சேதுபதி- திரிஷா நடிக்க உள்ள 96 இரண்டாம் பாகத்தை டான் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளதாகவும், விஜய் வசந்தா இசையமைக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.