தனிநபருக்கான வருமான வரி உச்சவரம்பு 7 லட்சத்தில் இருந்து 12 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இனி மாதம் 1 லட்சம் வரை சம்பாதிப்பவர்கள் வரி கட்ட தேவையில்லை.
பாதுகாப்பு துறைக்கு ரூ. 4.91 லட்சம் கோடி, சுகாதாரம் துறைக்கு ரூ. 98.311 கோடி, கல்வி துறைக்கு ரூ.1.28 லட்சம் கோடி ஒதுக்கீடு, வேளாண்மை- ரூ. 1.7 லட்சம் கோடி, ஊரக வளர்ச்சி- ரூ. 2.6 லட்சம் கோடி.
இந்த பட்ஜெட், நாட்டின் குடிமக்களின் பாக்கெட்டுகளை எப்படி நிரப்பும், நாட்டு குடிமக்களின் சேமிப்பு எப்படி அதிகரிக்கும், நாட்டின் குடிமக்கள் எப்படி வளர்ச்சியில் பங்குதாரர்களாக மாறுவார்கள் என்பதை பறைசாற்றுகிறது என மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
மக்களை வழக்கம் போல் ஏமாற்றும் பா.ஜ.க-வின் பம்மாத்து நாடகம் தொடர்கிறது என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்