மாமன்னன் படத்தைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் தற்போது 'வாழை' என்ற படத்தை தயாரித்து, இயக்கி உள்ளார்.
படம் வரும் ஆகஸ்ட் 23 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் சென்னையில் நடைபெற்ற வாழை படத்தின் Pre Release நிகழ்ச்சியில் வீடியோ மூலம் இயக்குநர் மணிரத்தினம் பேசியபோது
மாரி செல்வராஜ் ஒரு சிறந்த இயக்குநர். தமிழ் திரையுலகில் வலிமையான குரலாக விளங்குகிறார் உங்களை நினைத்து எனக்கு பெருமையா இருக்கு.
இதில் எப்படி கிராம கதையில் இவ்வளோ பேரு இவ்வளோ நல்லா நடிக்க வச்சாருக்காரு தெரியல எனக்கு பொறாமையா இருக்கு
எல்லா கதாபாத்திரமும் அருமையா பண்ணிருக்காங்க இது ஒரு தனி திறமை. இந்த படத்திற்கு என்னோட வாழ்த்துக்கள் என்று தெரிவித்து பாராட்டியுள்ளார்.