பெரிதும் பாராட்டப்பட்ட 'வெங்காயம்' திரைப்படத்தின் மூலம் கவனத்தை ஈர்த்த இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் தனது அடுத்த படைப்பாக உருவாக்கியுள்ள படம் 'பயாஸ்கோப்'.
சினிமா குறித்து எதுவும் தெரியாத கிராமத்து மக்கள் திரைப்படம் எடுக்கும் கலகலப்பான உண்மைக் கதையை திரையில் சொல்லும் 'பயாஸ்கோப்' திரைப்படத்தில்
சத்யராஜ் மற்றும் சேரன் சிறப்பு தோற்றத்தில் நடிக்க, சங்ககிரி ராஜ்குமார், சங்ககிரி மாணிக்கம் முக்கிய பாத்திரங்களில் தோன்றுகின்றனர்.
மேலும், இந்த உண்மைக் கதையில் அசலான கதை மாந்தர்களே அவரவர் வேடங்களை ஏற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.