இந்த கோயிலில் 60,70,75,80,90,100 வயதை பூர்த்தி அடைந்தவர்கள் சதாபிஷேகம், கனகாபிஷேகம் உள்ளிட்டற்றை செய்து தெய்வத்தை வழிபடுவர்.

நேற்று மாலை 80 வயதை அடைந்த இசையமைப்பாளர் இளையராஜா திருக்கடையூர் கோயிலில் சதாபிஷேகம் செய்தார்.
கோயில் கொடிமரத்தின் அருகே இளையராஜா கோ பூஜை, கஜ பூஜை செய்தார்.
பிறகு நூற்றுக்கால் மண்டபத்தில் 84 கலசங்கள் மற்றும் யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு சதாபிஷேக முதல் கால யாக பூஜைகள் நடைபெற்றன.
இந்நிகழ்ச்சியில் பாரதிராஜா, கார்த்திக் ராஜா, பவதாரணி, கங்கை அமரன், பிரேம்ஜி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.