கார்த்திகை திருவிழா - அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று அதிகாலை பரணி தீபம் ஏற்றப்பட்டது

கார்த்திகை தீபத்திருவிழாவின் ஒரு பகுதியாக, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று அதிகாலை பரணி தீபம் ஏற்ற்பட்டது.
திருப்பரங்குன்றம் முருகப்பெருமானுக்கு இன்று பட்டாபிஷேகம்: பக்தர்களுக்கு தடை

திருப்பரங்குன்றம் கோவிலில் இன்று முருகப்பெருமானுக்கு பட்டாபிஷேகம் நடக்கிறது. நாளை மாலை 6 மணிக்கு மலையில் மகாதீபம் ஏற்றப்படுகிறது.
காசி விஸ்வநாதர் கோவிலில் நாளை தெப்பக்குளத்தை சுற்றி 1008 தீபம் ஏற்றும் நிகழ்ச்சி

கன்னியாகுமரி சக்கர தீர்த்த காசி விஸ்வநாதர் கோவிலில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு கோவில் மற்றும் தெப்பக்குளத்தை சுற்றிலும் 1,008 சகஸ்ர தீபம் ஏற்றப்படுகிறது.
கார்த்திகை தீபத் திருவிழா: 8-ம் நாளை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் விநாயகர், சந்திரசேகரர் உலா

கார்த்திகை தீபத்திருவிழாவின் 8-ம் நாளான நேற்று அருணாசலேஸ்வரர்கோவிலில் அங்கரிக்கப்பட்ட வாகனத்தில் விநாயகர், சந்திரசேகரர் உலா நடந்தது.
நாளை கார்த்திகை தீப திருநாள்- தஞ்சையில் அகல் விளக்குகள் விற்பனை

நாளை கார்த்திகை தீப திருநாளையொட்டி தஞ்சையில் அகல் விளக்குகள் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது.
நாளை கந்தன் புகழ்பாடும் கார்த்திகைத் திருநாள் விரதம்

இழப்புகளை ஈடுசெய்யும் இந்த விரதத்தை எல்லோரும் கடைப்பிடித்து வாழ்க்கையில் வளம் பெறலாம். எனவே கந்தன் புகழ்பாடி கார்த்திகையை கொண்டாடினால் எந்த நாளும் இனிய நாளாக மாறும்.
திருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்படுவது இணையதளம், தொலைகாட்சி மூலம் நேரடி ஒளிபரப்பு

திருவண்ணாமலையில் கார்த்திகை தீபம் ஏற்றப்படும் நிகழ்வு இணையதளம், தொலைகாட்சி மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இதனை பொதுமக்கள் வீடுகளிலிருநந்தே நேரடியாக காணலாம்.
பாவங்களைப் போக்கும் பரணி தீப வழிபாடு

தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்கள் அகல, திருக்கார்த்திகைக்கு முந்திய நாளான பரணி நட்சத்திரமன்று (28.11.2020) அன்று மாலையில் இல்லம் எங்கும் விளக்கேற்றி, இறைவன் சன்னிதியிலும் விளக்கேற்றி வழிபட வேண்டும்.
திருவானைக்காவல் கோவிலில் சொக்கப்பனை அமைக்க முகூர்த்தக்கால் நடப்பட்டது

கார்த்திகை தீப திருநாளையொட்டி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி கோவிலில் சொக்கப்பனை அமைக்க முகூர்த்தக்கால் நடப்பட்டது.
செவ்வாய் தோஷம் போக்கும் திருக்கார்த்திகை வழிபாடு

செவ்வாய் தோஷம் இருப்பவர்கள் அச்சமின்றி வாழ, திருக்கார்த்திகை (29-11-2020) அன்று முருகப்பெருமான் வழிபாட்டையும், சக்தி வழிபாட்டையும் முறையாக மேற்கொண்டால் உடனடியாக நற்பலன்கள் கிடைக்கும்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நாளை கார்த்திகை தீபத்திருவிழா

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நாளை கார்த்திகை தீபத்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக 2 ஆயிரத்து 668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படுகிறது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையால் பக்தர்கள் மலையேறவும், கிரிவலம் செல்லவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
நாளை மறுநாள் திருக்கார்த்திகை விழா

இந்துக்களின் முக்கிய விழாவான திருக்கார்த்திகை விழா நாளை மறுநாள் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வீடுகளில் தீபம் ஏற்ற அகல்விளக்கு விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது.
பிரம்மரிஷி மலையில் 1,008 மீட்டர் நூல் திரியில் பிரமாண்ட கார்த்திகை தீபம்

பெரம்பலூர் அருகே எளம்பலூர் பிரம்மரிஷி மலையில் வருகிற 29-ந் தேதி கார்த்திகை தீபத்திரு நாளையொட்டி 1,008 மீட்டர் நூல் திரியில் பிரமாண்ட மகா தீபம் ஏற்றப்படுகிறது.
கார்த்திகை தீபத் திருவிழா 7-ம் நாள்: அருணாசலேஸ்வரர், பஞ்சமூர்த்திகள் உலா

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா 7-ம் நாள் விழாவான அருணாசலேஸ்வரர், பஞ்சமூர்த்திகள் உலா நடந்தது.
திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் தரிசனத்துக்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை

பவுர்ணமியை முன்னிட்டு திருப்பரங்குன்றம் மலையில் உள்ள உச்சிப்பிள்ளையார்கோவில் வளாகத்தில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்படுகிறது. இதில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.
அருணாசலேஸ்வரர் கோவிலில் தீபத் திருவிழா: பாதுகாப்புப் பணிகள் குறித்து டி.ஐ.ஜி. ஆய்வு

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் தீபத் திருவிழாவை முன்னிட்டு கோவில் வளாகத்தில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு பணிகள் குறித்து வேலூர் டி.ஐ.ஜி. நேரில் பார்வையிட்டு ஆய்வு பணி மேற்கொண்டனர்.
கார்த்திகை தீபத்திரு விழா: 6-ம் நாளில் 63 நாயன்மார்களுக்கு சிறப்பு பூஜை

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீப திருவிழாவின் 6-ம் நாளில் 63 நாயன்மார்கள் வீதி உலா ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து கோவிலில் நாயன்மார்களுக்கு பூஜைகள் நடந்தன. கொட்டும் மழையிலும் விநாயகர், சந்திரசேகரர் உலா நடைபெற்றது.
மீனாட்சி அம்மன் கோவிலில் தங்க ரத உலா நடைபெறாது

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் திருக்கார்த்திகை உற்சவ விழாவில் தங்க ரத உலா நடைபெறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சோலைமலை முருகன் கோவிலில் 29-ந்தேதி கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது

சோலைமலை முருகன் கோவிலில் வருகிற 29-ந்தேதி கார்த்திகை மகா தீபம் ஏற்றப்படுகிறது. மேள தாளம் முழங்க சுவாமி புறப்பாடு, அபிஷேகம், தீபாராதனைகள் நடைபெறும்.
கார்த்திகை திருவிழா: பழனி கோவிலில் ஒரு மணி நேரத்துக்கு ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி

பழனி முருகன் கோவில் திருக்கார்த்திகை திருவிழாவில், ஒரு மணி நேரத்துக்கு ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என்று கலெக்டர் விஜய லட்சுமி தெரிவித்துள்ளார்.
அருணாசலேஸ்வரர் கோவில் தீபத் திருவிழா: 5-ம் நாளில் விநாயகர், சந்திரசேகரர் உற்சவ உலா

திருவண்ணாமலையில் அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று 5-ம் நாள் விழா நடைபெற்றது.