கோட்டை மாரியம்மனுக்கு மஞ்சள் நீராட்டு நாளை நடக்கிறது

திண்டுக்கல் விஸ்வகர்ம மகாஜன சபா சார்பில் கோட்டை மாரியம்மனுக்கு மஞ்சள் நீராட்டு நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.
திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் மாசித்திருவிழா தேரோட்டம்

திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் மாசித்திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் இன்று குண்டம் திருவிழா

ஆனைமலை மாசாணியம்மன் கோவில் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பக்தர்கள் குண்டம் இறங்கும் நிகழ்ச்சி இன்று (சனிக்கிழமை) நடைபெறுகிறது. இதில் விரதம் இருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்குகின்றனர்.
வடிவுடையம்மன் கோவிலில் கல்யாணசுந்தரர் திருக்கல்யாண உற்சவம்

திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவிலில் பிரம்மோற்சவ விழாவின் மற்றொரு முக்கிய நிகழ்வான கல்யாண சுந்தரர் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.
திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் மின்தேரில் பவனி

திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் மாசி திருவிழாவை முன்னிட்டு மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் கோட்டை மாரியம்மன் எழுந்தருளி பவனி வந்தார்.
மாசாணியம்மன் கோவில் மயான பூஜை: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் குண்டம் திருவிழாவையொட்டி ஆழியாற்றங்கரையில் மயான பூஜை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவில் தேரோட்டம்: திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில் மாசி பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான தேர் திருவிழா நேற்று வெகு விமர்சையாக நடைபெற்றது.
பழனி மாரியம்மன் கோவிலில் மாசித்திருவிழா கொடியேற்றம்

பழனி முருகன் கோவிலின் உபகோவிலாக விளங்கும் மாரியம்மன் கோவிலில் கொடியேற்றம் நடைபெற்றது. அப்போது கொடிமரத்திற்கு சிறப்பு அலங்காரம் செய்து வேத மந்திரங்கள் முழங்க தீபாராதனை நடைபெற்றது.
தேர்த்திருவிழாவையொட்டி கோனியம்மன் கோவிலில் கொடியேற்றம்

கோவையின் காவல்தெய்வம் என்று அழைக்கப்படும் கோனியம்மன் கோவில் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக தேர்திருவிழா கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது.
ஆனைமலை மாசாணியம்மன் கோவில் குண்டம் திருவிழாவையொட்டி இன்று மயான பூஜை

ஆனைமலை மாசாணியம்மன் கோவில் குண்டம் திருவிழாவையொட்டி இன்று நள்ளிரவு மயான பூஜை நடைபெறுகிறது. இதையொட்டி பக்தர்கள் வசதிக்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவில் தேரோட்டம் நாளை நடக்கிறது

சென்னை திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவிலில் மாசி மாத பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் நாளை (புதன்கிழமை) காலை 9 மணிக்கு நடைபெறுகிறது.
அருள்மிகு சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் திருக்கோவில்

சிறுவாச்சூருக்கு வெள்ளிக்கிழமை வந்த மதுரை காளியம்மன் பக்தர்களுக்குத் திங்கள் கிழமை காட்சி தருவதாகவும், எனவே தான் சிறுவாச்சூர் ஆலயம், வெள்ளி, திங்கள் மட்டும் திறந்து பூஜை செய்யப்படுவதாகவும் ஆன்றோர்கள் செவிவழியே இந்த அரிய வரலாற்றை தெரிவித்துள்ளனர்.
கோட்டை மாரியம்மன் கோவில் நடை திறப்பு நேரம் அதிகரிப்பு

திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் மாசித் திருவிழாவையொட்டி கோவிலின் நடை திறப்பு நேரம் தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது.
கோட்டை மாரியம்மன் கோவில் மாசித்திருவிழா: பால்குடம் எடுத்து பக்தர்கள் ஊர்வலம்

திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் மாசித்திருவிழாவை முன்னிட்டு பால்குட ஊர்வலம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் பால்குடம் எடுத்து ஊர்வலமாக சென்றனர்.
கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி பக்தர்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலம்

திண்டுக்கல் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவிலில் மாசித்திருவிழாவை முன்னிட்டு முளைப்பாரி ஊர்வலம் நடந்தது.
கோட்டை மாரியம்மன் கோவிலில் மாசி திருவிழா: அம்மன் நாகல்நகர் புறப்பாடு மாற்றம்

திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவிலில் மாசித் திருவிழா தற்போது நடைபெற்று வருகிறது. கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக இந்த ஆண்டு அம்மனின் நாகல்நகர் புறப்பாடு நிகழ்ச்சியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கோட்டை மாரியம்மன் கோவிலில் மாசித்திருவிழா கொடியேற்றம்

திண்டுக்கல்லில் பக்தர்களின் பக்தி கோஷம் முழங்க கோட்டை மாரியம்மன் கோவிலில் மாசி திருவிழாவில் கொடியேற்றம் நடந்தது. அப்போது சுற்றி இருந்த பெண்கள் பக்தி பரவசத்தில் "ஓம் சக்தி, பராசக்தி" என்று கோஷம் எழுப்பினர்.
திண்டுக்கல்லில் மாசி திருவிழா: கோட்டை மாரியம்மன் பூத்தேரில் வீதி உலா

திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா நடந்தது. இந்த ஊர்வலம் திண்டுக்கல் நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தது.
திண்டுக்கல்லில் மாசி திருவிழா: கோட்டை மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம்

திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் மாசித்திருவிழாவை முன்னிட்டு பூத்தமலர் பூ அலங்கார மண்டகப்படி சார்பில் அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டன.