திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் தரிசன நேரம் இரவு 8 மணிவரை நீட்டிப்பு

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் தினமும் மாலை 6 மணிவரை இருந்த தரிசன நேரம் இரவு 8 மணிவரை நீடிக்கப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த ஆண்டு கொரோனா பரவல் அச்சத்தால் பக்தர்களுக்கு அனுமதியின்றி ஏகாந்தமாக கோவில் உள்ளேயே வாகனச் சேவை நடக்கிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனம்

கார்த்திகை பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனம் நடந்தது. திருமலை திருப்பதி தேவஸ்தான துணை அதிகாரி பசந்த்குமார், பத்மாவதி தாயார் கோவில் அதிகாரி ஜான்சிலட்சுமி ஆகியோர் கொடிமரத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
திருப்பதியில் நடத்தியது போல் பத்மாவதி தாயார் கோவிலிலும் பிரம்மோற்சவ விழா தனிமையில் நடத்தப்படுகிறது

திருப்பதியில் 2 பிரம்மோற்சவ விழாக்கள் கொரோனா விதிமுறைகளை கடைபிடித்து தனிமையில் நடத்தப்பட்டது போல் பத்மாவதி தாயார் பிரம்மோற்சவ விழாவும் கோவிலுக்குள் ஏகாந்தமாக பக்தர்கள் இன்றி தனிமையில் நடத்தப்பட உள்ளது.
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் கார்த்திகை பிரம்மோற்சவ விழா 11-ந்தேதி தொடங்குகிறது

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் ஆண்டு தோறும் நடக்கும் கார்த்திகை பிரம்மோற்சவ விழா வருகிற 11-ந்தேதி (புதன்கிழமை) தொடங்குகிறது.
0