திருப்பைஞ்சீலி நீலிவனநாதர் கோவிலில் தேர்த்திருவிழா விடையாற்றியுடன் நிறைவு

திருப்பைஞ்சீலி நீலிவனநாதர் கோவிலில் தேர்த்திருவிழா நிறைவு நாளை முன்னிட்டு உற்சவர்களான சுவாமி- அம்பாள், நடராஜர், விநாயகர் உள்ளிட்ட சாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன.
பாப்பாரப்பட்டியில் 80 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த வரதராஜ சுவாமி கோவில் தேர்த்திருவிழா

தருமபுரி மாவட்டம், பாப்பாராப்பட்டியில் உள்ள அபிஷ்ட வரதராஜ சுவாமி கோவிலில் தேர்திருவிழா வெகுவிமர்சையாக நடந்தது. அப்போது பெண்கள் கோலாட்டம் ஆடி பாடி ஊர்வலமாக சென்றனர்.
சேலம் கோட்டை பெருமாள் கோவில் வைகாசி விசாக தேர்த்திருவிழாவுக்கு முகூர்த்தக்கால் நடப்பட்டது

சேலம் கோட்டை பெருமாள் கோவில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கு காரணமாக தேர்த்திருவிழா நடைபெறவில்லை. இந்தாண்டு வைகாசி விசாக தேர்த்திருவிழா அடுத்த மாதம் (ஜூன்) 13-ந் தேதி நடைபெறுகிறது.
தளியில் சந்தான வேணுகோபால சாமி தேர்த்திருவிழா

தளியில் சந்தான வேணுகோபால சாமி தேர்த்திருவிழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம்பிடித்து இழுத்தனர்.
சூலக்கல் மாரியம்மன் கோவில் தேர் திருவிழா தொடங்கியது

கிணத்துக்கடவு அருகே சூலக்கல் மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவில் வருகிற 26, 27, 28-ந் தேதிகளில் தினமும் மாலை 4 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்து தேரோட்டம் நடைபெறுகிறது.
தாயுமான சுவாமி கோவில் சித்திரை தேர்த்திருவிழா தொடக்கம்

தாயுமான சுவாமி கோவிலில் வருகிற 9-ந்தேதி சிவபக்தியில் சிறந்த ரத்தினாவதிக்கு சிவபெருமான் அவளது தாயாக (தாயுமானவராய்) எழுந்தருளி மருத்துவம் செய்த ஐதீக நிகழ்ச்சி நூற்றுக்கால் மண்டபத்தில் நடைபெறுகிறது.
அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது

அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர்த்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான 63 நாயன்மார்களுக்கு பஞ்ச மூர்த்திகள் காட்சி அளிக்கும் வைபவம் மற்றும் புறப்பாடு 9-ந்தேதி முதல் தொடங்கி நடக்கிறது.
திருச்சி தாயுமான சுவாமி கோவில் சித்திரை தேர்த்திருவிழா 5-ந்தேதி தொடக்கம்

திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவில் சித்திரை தேர்த்திருவிழா 5-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 13-ந்தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.
சமயபுரம் மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா நிறைவு

சமயபுரம் மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவில் தங்க கமல வாகனத்தில் அம்மன் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அத்துடன் சமயபுரம் மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா நிறைவு பெற்றது.
ஸ்ரீரங்கம் சித்திரை தேர்த்திருவிழா: கருட வாகனத்தில் நம்பெருமாள் வீதி உலா

ஸ்ரீரங்கம் சித்திரை தேர்த்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சித்திரை தேரோட்டம் வருகிற 29-ந் தேதி நடைபெறுகிறது. விழாவின் நிறைவு நாளான மே மாதம் 1-ந் தேதி நம்பெருமாள் ஆளும் பல்லக்கில் எழுந்தருளி வீதி உலா வருகிறார்.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேர்த்திருவிழா

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சித்திரை தேரோட்டம் வருகிற 29-ந் தேதி நடைபெறுகிறது.
சூலக்கல் மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா மே மாதம் 9-ந்தேதி தொடங்குகிறது

கொரோனா காரணமாக 2 ஆண்டுகளுக்கு பிறகு சூலக்கல் மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா 9-ந்தேதி தொடங்குகிறது. தேரோட்டம் 3 நாட்கள் நடக்கிறது.
அவினாசி லிங்கேசுவரர் கோவில் தேர்த்திருவிழா 5-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது

அவினாசி லிங்கேசுவரர் கோவில் தேர்த்திருவிழாவின் முக்கிய நிகழ்வான பஞ்சமூர்த்திகள் புறப்பாடு, 63 நாயன்மார்கள் திருவீதி உலா நிகழ்ச்சி 9-ந்தேதி இரவு நடக்கிறது.
உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவில் உடலில் கத்திப்போட்டு பக்தர்கள் வழிபாடு

இந்த ஊர்வலத்திற்கு முன்னால் தேவாங்கர் சமூகத்தைச் சேர்ந்த 25க்கும் மேற்பட்டோர் கையில் கத்திகளுடன் தீசுக்கோ, தீசுக்கோ என்று சத்தமிட்டு ஆடியபடி வந்தனர்.
சித்திரை திருவிழா: சிம்ம வாகனத்தில் எழுந்தருளிய சமயபுரம் மாரியம்மன்

சமயபுரம் மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவின் 2-ம் நாளில் அம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
கலியுக வரதராஜ பெருமாள் கோவில் தேர்த்திருவிழா கொடியேற்றம்

கடந்த இரண்டு ஆண்டுகளாக நோய்த்தொற்று காரணமாக தேர்த் திருவிழா நடைபெறவில்லை. இந்த ஆண்டு திருவிழா சிறப்பாக நடப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
மண்ணச்சநல்லூர் வரதராஜ பெருமாள் கோவில் தேர்த்திருவிழா

மண்ணச்சநல்லூர் வரதராஜ பெருமாள் கோவில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு இன்று(சனிக்கிழமை) யாழி வாகனத்திலும், நாளை(ஞாயிற்றுக்கிழமை) அனுமந்த வாகனத்திலும் பெருமாள் புறப்பாடாகிறார்.
திருக்கொடுங்குன்றநாதர் கோவில் தேரோட்ட திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

பொன்னம்பல அடிகளாரிடம் அனுமதி வாங்கும் நிகழ்வாக அணிக்கை பெறுதல் என்ற ஆதின மரபுப்படி திருத்தேங்காய் தொடுதல் விழா நடைபெற்றது.
சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை தேர்த்திருவிழா 10-ந்தேதி தொடங்குகிறது

சமயபுரம் மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா வருகிற 10-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 19-ந்தேதி நடைபெறுகிறது.
1