சென்னையில் 30 சதவீதம் மாணவர்கள் பள்ளிக்கு வரவில்லை- கல்வி அதிகாரிகள் விசாரணை

சென்னை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவர்களில் 30 சதவீதம் பேர் பள்ளிக்கு வரவில்லை. எந்த காரணத்திற்காக மாணவர்கள் வரவில்லை என்பதை பெற்றோரிடம் கேட்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பள்ளிகளை திறப்பது குறித்து தமிழக அரசுதான் முடிவு எடுக்க வேண்டும்- ஐகோர்ட்டு உத்தரவு

பள்ளிகளை திறப்பது குறித்த சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்து தமிழக அரசுதான் சுதந்திரமாக முடிவு எடுக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
அரியானாவில் பிப்ரவரி முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்க வாய்ப்பு

அரியானாவில் பிப்ரவரி முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக அம்மாநில கல்வித்துறை தெரிவித்துள்ளது.
பள்ளிக்கு சென்ற 12-ம் வகுப்பு மாணவிக்கு கொரோனா

சேலம் மாவட்டத்தில் பள்ளிக்குச் சென்ற 12-ம் வகுப்பு மாணவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
98 சதவீத பெற்றோர் ஆதரவால் பள்ளிகள் திறக்கப்பட்டது- அமைச்சர் செங்கோட்டையன்

தமிழகத்தில் 98 சதவீதம் பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் ஒப்புதலுடன் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
மாஞ்சோலையில் ஒரே ஒரு மாணவருக்காக திறக்கப்பட்ட அரசு பள்ளி

10-ம் வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்க உத்தரவிடப்பட்டதால் மாஞ்சோலை அரசு பள்ளியில் படிக்கும் ஒரே ஒரு மாணவருக்காக அந்த பள்ளி திறக்கப்பட்டது.
10 மாதங்களுக்கு பிறகு திறப்பு- தனியார் பள்ளிகளை விட அரசு பள்ளிக்கு அதிக மாணவர் வருகை

தமிழகம் முழுவதும் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 மாணவர்களுக்காக பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. தனியார் பள்ளிகளை விட அரசு பள்ளிக்கு அதிக மாணவர்கள் வந்திருந்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிக்கூடங்கள் திறப்பு- 72 சதவீதம் மாணவ, மாணவிகள் வருகை

தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிக்கூடத்துக்கு 72 சதவீதம் மாணவ-மாணவிகள் வந்தனர்.
நீலகிரியில் 95 சதவீத மாணவர்கள் பள்ளிகளுக்கு வருகை

10 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டதையடுத்து நீலகிரியில் 95 சதவீத மாணவர்கள் பள்ளிகளுக்கு வருகை தந்தனர். அவர்கள் தெர்மல் பரிசோதனைக்கு பின்னர் அனுமதிக்கப்பட்டனர்.
பள்ளிகள் திறப்பு மகிழ்ச்சி அளிக்கிறது- ஆசிரியர்கள், மாணவர்கள் கருத்து

பள்ளிகள் திறப்பு மகிழ்ச்சி அளிக்கிறது என்று ஆசிரியர்களும், மாணவிகளும் தெரிவித்தனர்.
தமிழகத்தில் 10 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் திறப்பு: ஆர்வமுடன் வந்த மாணவ-மாணவிகள்

தமிழகத்தில் 10 மாத காலத்துக்கு பிறகு பள்ளிகள் இன்று திறக்கப்பட்டதால் மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் வந்தனர்.
பள்ளிகள் திறப்பு- முதல் நாளில் 80 சதவீதம் வருகைப்பதிவு

பள்ளிகள் திறந்த முதல் நாளான இன்று தமிழகம் முழுவதும் 80 சதவீதம் மாணவ-மாணவிகள் வந்திருந்தனர்.
பள்ளிகளுக்கு மீண்டும் சென்றது சிறகடித்து பறப்பது போல உள்ளது: மாணவ-மாணவிகள் உற்சாக பேட்டி

நீண்ட நாட்களுக்கு பிறகு பள்ளிக்கு வந்தது மகிழ்ச்சியாக உள்ளது. சக தோழிகளையும், ஆசிரியர்களையும் நேரில் சந்தித்தது ஒருவித உற்சாகத்தை கொடுக்கிறது என்று மாணவ-மாணவிகள் தெரிவித்தனர்.
10, 12ம் வகுப்புகள் தொடக்கம்: மகிழ்ச்சியும், உற்சாகமும் பொங்க பள்ளிக்கு வந்த மாணவ-மாணவிகள்

பள்ளிக்குள் வரும் மாணவ-மாணவிகளை ஆசிரியர்கள் வகுப்புகளுக்கு தகுந்த இடைவெளியுடன் அழைத்து சென்று அமர வைத்தனர்.
பள்ளிக்கு வரத்தொடங்கிய 10, 12ம் வகுப்பு மாணவர்கள்- வரவேற்ற ஆசிரியர்கள்

தமிழகத்தில் 10 மாத காலத்துக்கு பிறகு இன்று பள்ளிகள் திறப்பதால் 10, 12ம் வகுப்பு மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பள்ளிக்கு வந்தனர்.
தமிழகத்தில் இன்று முதல் பள்ளிகள் திறப்பு

தமிழகத்தில் இன்று முதல் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. 10 மாத காலத்துக்கு பிறகு இன்று பள்ளிகள் திறப்பதால் மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் வருவார்கள் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் நாளை 232 பள்ளிகள் திறப்பு- தூய்மை பணிகள் தீவிரம்

திருவாரூர் மாவட்டத்தில் 232 பள்ளிகள் நாளை திறக்கப்படும் நிலையில் வகுப்பறைகளை கிருமி நாசினி கொண்டு தூய்மைப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
நாளை பள்ளிக்கூடங்கள் திறப்பு- ஏற்பாடுகள் தீவிரம்

ஈரோடு மாவட்டத்தில் நாளை பள்ளிக்கூடங்கள் திறப்பதை முன்னிட்டு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.
பாதுகாப்பு அம்சங்கள் குறித்து அனைத்து பள்ளிகளிலும் அதிகாரிகள் குழு ஆய்வு

சென்னை மாவட்டத்தில் முதன்மை கல்வி அதிகாரி அனிதா தலைமையில் 74 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அவர்கள் 600-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.