எதிர்பார்த்த அளவுக்கு பயணிகள் வராததால் பொங்கல் சிறப்பு பஸ்கள் எண்ணிக்கை குறைப்பு

சிறப்பு பஸ்கள் பொது மக்கள் வசதிக்காக அறிக்கப்பட்ட நிலையில் எதிர்பார்த்த அளவு கூட்டம் இல்லாததால் குறைவான அளவே பஸ்கள் இயக்கப்பட்டன.
சென்னையில் இந்த ஆண்டு போகி புகை அதிகம் இல்லை

போகி பண்டிகையான இன்று சென்னையில் புகை மூட்டம் காணப்படவில்லை. பெரும்பாலான தெருக்களில் பழைய பொருட்கள் எரிக்கப்படவில்லை.
நாளையும், நாளை மறுநாளும் பொங்கல் வைக்க உகந்த நேரம்

பொங்கல் பண்டிகை நாளை (14-ந் தேதி) கொண்டாடப்படுகிறது. நாளை மறுநாள் (15-ந் தேதி) மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் பொங்கல் வைக்க உகந்த நேரத்தை ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.
அவல் வைத்து சூப்பரான சத்தான பொங்கல் சமைக்கலாம்

காலையில் எளிய முறையில் சத்தான சுவையான உணவு செய்ய நினைத்தால் அவல் பொங்கல் செய்யலாம். இன்று அதன் செய்முறை விளக்கத்தை பார்க்கலாம்.
சமூகத்தில் நல்லிணக்கத்தின் பிணைப்பை வலுப்படுத்தட்டும்- ஜனாதிபதி பொங்கல் வாழ்த்து

சமூகத்தில் அன்பு, பாசம் மற்றும் நல்லிணக்கத்தின் பிணைப்பை வலுப்படுத்தி நாட்டில் செழிப்பையும் மகிழ்ச்சியையும் அதிகரிக்கட்டும் என ஜனாதிபதி கூறி உள்ளார்.
பொங்கல் பண்டிகை- ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வாழ்த்து

பொங்கல் பண்டிகை ஒவ்வொருவரின் உள்ளத்திலும் மிகுந்த செழிப்பை கொண்டுவர விரும்புகிறேன் என்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார்.
கோவா ஆளுநர் மாளிகையில் குடும்பத்தினருடன் போகி கொண்டாடிய துணை ஜனாதிபதி

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, கோவா ஆளுநர் மாளிகையில் இன்று போகி பண்டிகையை கொண்டாடினார்.
பழையன கழிதலும், புதியன புகுதலும்... போகிப் பண்டிகை கொண்டாட்டம்

போகி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் இன்று பழைய பொருட்களை தீயிட்டு எரித்தனர். இதனால் பல்வேறு இடங்களில் புகை மூட்டமாக காணப்பட்டது.
பொங்கல் பண்டிகையையொட்டி பெரம்பலூரில் மண்பானை- கரும்பு விற்பனை மும்முரம்

பொங்கல் பண்டிகையையொட்டி பெரம்பலூரில் மண்பானைகள், கரும்பு கட்டுகளின் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது.
பொங்கல் பண்டிகைக்காக லாரிகளில் தஞ்சைக்கு வந்து குவியும் வாழைத்தார்கள்

தூத்துக்குடி, திருச்சி மாவட்டங்களில் இருந்து பொங்கல் பண்டிகைக்காக லாரிகளில் தஞ்சைக்கு வாழைத்தார்கள் வந்து குவிந்த வண்ணம் உள்ளது. இந்த ஆண்டு விலையும் அதிகரித்து காணப்படுகிறது.
பா.ஜ.க. தலைவர் ஜே.பி.நட்டா 14-ந்தேதி பொங்கல் விழாவில் பங்கேற்பு

சென்னை வரும் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மதுரவாயலில் நடைபெறும் நம்ம ஊர் பொங்கல் விழாவில் பங்கேற்கிறார்.
பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊருக்கு செல்ல ரெயில் நிலையங்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது

பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. எழும்பூர், சென்ட்ரல் ரெயில் நிலையங்களில் நேற்று அதிகளவில் கூட்டம் காணப்பட்டது.
உடன்குடியில் களைகட்டிய பொங்கல் சந்தை

உடன்குடியில் நடைபெற்ற பொங்கல் சந்தையில், கரும்பு, மஞ்சள், வாழைத்தார் உள்ளிட்ட பொங்கல் பொருட்களை பொதுமக்கள் போட்டி போட்டு வாங்கி சென்றனர்.
உடன்குடி பகுதியில் பண்டிகையை வரவேற்று பூத்துக்குலுங்கும் ‘பொங்கல் பூ’

உடன்குடி பகுதியில் பொங்கல் பண்டிகையை வரவேற்று பல இடங்களில் பொங்கல் பூ பூத்து குலுங்குகிறது.
பொங்கலுக்கு வெளியூர் செல்ல வசதியாக சென்னையில் 310 மாநகர பஸ்கள்

பொங்கலுக்கு வெளியூர் செல்ல வசதியாக சென்னையில் மேலும் 310 மாநகர பஸ்களை 24 மணி நேரமும் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஜன. 25-ந்தேதி வரை பொங்கல் பரிசு ரூ.2,500 விநியோகம்- தமிழக அரசு

2,500 ரூபாயுடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பை வரும் 25- ந்தேதி வரை பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
சமத்துவப் பொங்கல் விழா- தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

தமிழர் திருநாளைத் தமிழ்நாடெங்கும் சமத்துவப் பொங்கல் விழாவாகக் கொண்டாடுவோம் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாகையில், கரும்பு-மண்பானைகள் விற்பனை மும்முரம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாகையில், கரும்பு, மண்பானைகள் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது.
பொங்கல் பண்டிகை- சிறப்பு பஸ்களின் சேவை தொடங்கியது

பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் சிறப்பு பஸ்களின் சேவை தொடங்கியது.
நம்ம ஊரு பொங்கல் திருவிழா: எல்.முருகன்-குஷ்பு பங்கேற்பு

ராமநாதபுரம், மதுரை மாவட்டத்தில் நம்ம ஊரு பொங்கல் விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. விழாவில் பா.ஜனதா மாநில தலைவர் எல்.முருகன், செய்தி தொடர்பாளர் குஷ்பு கலந்து கொண்டனர்.
பொங்கல் பண்டிகை: சென்னையில் இருந்து நாகர்கோவில், கோவைக்கு சிறப்பு ரெயில்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து நாகர்கோவில், கோவைக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.