104-வது பிறந்தநாள் விழா: எம்.ஜி.ஆர்.சிலைக்கு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் மரியாதை

அ.தி.மு.க. தலைமைக்கழகத்தில் உள்ள எம்.ஜி.ஆர்.சிலைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
பிரதமருடன் 19-ந்தேதி எடப்பாடி பழனிசாமி சந்திப்பு: நாளை டெல்லி பயணம்

மெட்ரோ ரெயில் திட்டம், காவிரி குண்டாறு இணைப்பு திட்டம் உள்ளிட்ட 5 திட்டங்களை தொடங்கி வைக்கும்படி பிரதமர் மோடியை சந்தித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுக்கிறார்.
22, 23-ந்தேதிகளில் பிரசாரம்: கோவையில் எடப்பாடி பழனிசாமி 25 இடங்களில் பேசுகிறார்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகிற 22 மற்றும் 23-ந்தேதிகளில் கோவை மாவட்டத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.
கொரோனா தடுப்பூசியை நானும் போட்டுக்கொள்வேன்- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

“கொரோனா தடுப்பூசியை நானும் போட்டுக்கொள்வேன்” என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
மதுரை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா தடுப்பூசி திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

மதுரை ராஜாஜி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
சசிகலாவை அதிமுகவில் சேர்க்க வேண்டும்- ஆடிட்டர் குருமூர்த்தி பேச்சு

தி.மு.க.வை எதிர்கொள்ள சசிகலாவை அ.தி.மு.க.வில் சேர்க்கவேண்டும் என்று ஆடிட்டர் குருமூர்த்தி பேசியுள்ளார்.
உழவு செழிக்கட்டும் உழவர் மகிழட்டும்- முதலமைச்சர் மாட்டுப்பொங்கல் வாழ்த்து

மாட்டுப்பொங்கல் திருநாளில் உழவு செழிக்கட்டும்; உழவர் மகிழட்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழகம் அமைதி பூங்காவாக இருக்க தமிழக காவல்துறையே முக்கிய காரணம் - முதலமைச்சர் பழனிசாமி

தமிழகம் அமைதி பூங்காவாக இருக்க தமிழக காவல்துறையே முக்கிய காரணம் என்று முதலமைச்சர் பழனிசாமி கூறினார்.
காவல்துறை சார்பில் பொங்கல் விழா- முதல்வர் பழனிசாமி பங்கேற்பு

சென்னையில் காவலர்களின் குடும்பத்துடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பொங்கல் பண்டிகையை கொண்டாடினார்.
மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

தென்மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் அறிவித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
நாளை பொங்கல் பண்டிகை: தலைவர்கள் வாழ்த்து

பொங்கல் பண்டிகை நாளை (14-ந்தேதி) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.
3 நாட்கள் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா பொதுக்கூட்டங்கள்

டாக்டர் எம்.ஜி.ஆரின் 104-வது பிறந்த நாளை முன்னிட்டு வருகிற 17-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை 3 நாட்கள், எம்.ஜி.ஆரின் 104-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ளன.
பொங்கல் திருநாளையொட்டி 3,186 போலீசாருக்கு பதக்கம்- எடப்பாடி பழனிசாமி உத்தரவு

பொங்கல் திருநாளையொட்டி 3,186 போலீசாருக்கு பதக்கங்கள் வழங்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆணையிட்டுள்ளார்.
ஜெயலலிதா நினைவிடத்தை 27-ந்தேதி திறக்க திட்டம்: எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் விழா

ஜெயலலிதா நினைவிட திறப்பு விழா முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெறுகிறது. நினைவிடத்தை எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்கிறார்.
அனைவரது வாழ்விலும் அன்பும் அமைதியும் நிலவட்டும்- எடப்பாடி பழனிசாமி பொங்கல் வாழ்த்து

தைப் பொங்கல் திருநாளில் மக்கள் அனைவரது வாழ்விலும் அன்பும் அமைதியும் நிலவட்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 16ந் தேதி கொரோனா தடுப்பூசி- எடப்பாடி பழனிசாமி மதுரையில் தொடங்கி வைக்கிறார்

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணியை மதுரை ராஜாஜி அரசு ஆஸ்பத்திரியில் 16-ந் தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்.
ஜெயலலிதாவின் நினைவிடம் அடுத்த மாதம் திறப்பு: எடப்பாடி பழனிசாமி 18-ந்தேதி டெல்லி பயணம்

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகிற 18-ந்தேதி டெல்லி செல்கிறார். அவருடன் தலைமை செயலாளர் சண்முகம் மற்றும் உயர் அதிகாரிகளும் செல்ல உள்ளனர்.
10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் 19ந்தேதி முதல் பள்ளிகள் திறப்பு- முதலமைச்சர் உத்தரவு

தமிழகத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் 19-ந்தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஜனவரி 19 முதல் பள்ளிகள் திறப்பு

தமிழகத்தில் ஜனவரி 19ம் தேதி முதல் 10, 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.