எளிமையாக நடந்தது மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

முக கவசம், சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்றவை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மக்கள் அதிகமாக கூடும் கோவில் திருவிழாக்களை நடத்த கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாண நிகழ்வை காண பக்தர்களுக்கு அனுமதி

உலக புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவிற்கு தடைவிதிக்கப்பட்ட நிலையில், திருக்கல்யாண நிகழ்வை காண பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நாளை, தமிழ்ப்புத்தாண்டு பிறப்பு: மதுரை மீனாட்சி அம்மனுக்கு தங்கக்கவசம், வைரகிரீடம் அணிவிப்பு

நாளை தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மூலவர் மீனாட்சி அம்மனுக்கு தங்க கவசமும், வைரகிரீடமும், சுந்தரேசுவரருக்கு வைர நெற்றிப்பட்டையும் அணிவிக்கப்படுகிறது.
மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவிற்கு முகூர்த்தக்கால் நடப்பட்டது

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா உள் திருவிழாவாக நடத்தப்படலாம் என தெரிகிறது. ஆனால் கோவில் நிர்வாகம் சார்பில் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்படவில்லை.
மதுரை சித்திரை திருவிழா இந்த ஆண்டும் ரத்து

கோவில் திருவிழாக்கள் நடத்த தடை விதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி மதுரை சித்திரை திருவிழாக்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுகின்றன. கடந்த ஆண்டைப்போல் கோவில் வளாகத்திலேயே உள் திருவிழாவாக நடைபெறும்.
மதுரை சித்திரை திருவிழாவுக்கு விதிவிலக்கு கிடைக்குமா?: பக்தர்கள் எதிர்பார்ப்பு

கொரோனாவால் கோவில் திருவிழாக்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆனாலும் உலகப்புகழ் பெற்ற, மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவுக்கு விதிவிலக்கு கிடைக்குமா? என்று பக்தர்கள் எதிர்ப்பார்த்துள்ளனர்.
மீனாட்சி அம்மனின் புகழ் பாடும் 108 போற்றி திருநாமங்கள்

மீனாட்சி அம்மனின் புகழ் பாடும் இந்த 108 போற்றி திருநாமங்களை தினமும் அல்லது வெள்ளிக்கிழமை, செவ்வாய்க்கிழமைகளில் சொல்லி வழிபாடு செய்து வந்தால் துன்பங்கள் பறந்தோடும்.
மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று முதல் பக்தர்களுக்கு அன்னதான பார்சல்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சுமார் ஒரு ஆண்டுக்கு பிறகு மீண்டும் இன்று முதல் கோவிலுக்குள் அன்னதானம் வழங்கப்பட இருப்பது பக்தர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மாசி மக திருவிழாவில் சப்தாவர்ண சப்பரத்தில் மீனாட்சி அம்மன் வீதி உலா

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மாசி மக திருவிழாவில் சப்தாவர்ண சப்பரத்தில் சாமியும், அம்மனும் எழுந்தருளி சித்திரை வீதிகளை வலம் வந்தனர்.
மீனாட்சி அம்மன் கோவிலில் மாசி மண்டல உற்சவ விழா சுற்று கொடியேற்றம்

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மாசி மண்டல உற்சவ விழா சுற்று கொடியேற்றம் நடந்தது. இதையொட்டி 10 நாட்கள் சித்திரை வீதிகளில் சாமி வலம் வருவார்.
மீனாட்சி அம்மன் கோவிலில் அனைத்து கோபுர வாசல்களிலும் பக்தர்களுக்கு அனுமதி

மீனாட்சி அம்மன் கோவிலில் அனைத்து கோபுர வாசல்கள் வழியாகவும் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா ஏப்ரல் 15-ந் தேதி தொடக்கம்

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா வருகிற ஏப்ரல் 15-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
தங்க கவசம், வைர கிரீடத்தில் காட்சியளித்த மீனாட்சி அம்மன்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மூலவர் அம்மனுக்கு வைரகிரீடம், தங்ககவசம், சாமிக்கு வைர நெற்றிபட்டை அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தார்.
மீனாட்சி அம்மன் கோவிலில் அனைத்து கோபுரவாசல்கள் வழியாகவும் பக்தர்களை அனுமதிக்க கோரிக்கை

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் அனைத்து கோபுர வாசல்கள் வழியாகவும் பக்தர்களை அனுமதிக்க வேண்டும். மேலும் பூஜை பொருட்களை கொண்டு செல்ல முடியாததால் பக்தர்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.
தை அமாவாசையையொட்டி மீனாட்சி அம்மனுக்கு நாளை வைரகிரீடம் அணிவிப்பு

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தை அமாவாசையை முன்னிட்டு நாளை(வியாழக்கிழமை) மூலவர் அம்மனுக்கு வைரகிரீடம், தங்ககவசம், சாமிக்கு வைர நெற்றிப்பட்டை அணிவிக்கப்படுகிறது.
பக்தி கோஷம் முழங்க தெப்பக்குளத்தை வலம் வந்த மீனாட்சி-சுந்தரேசுவரர்

மதுரையில் தெப்ப திருவிழா நேற்று கோலாகலமாக நடந்தது. தைப்பூச விடுமுறை என்பதால் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு தரிசனம் செய்தனர்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தெப்ப திருவிழா நாளை நடக்கிறது

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தெப்ப திருவிழா நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி நேற்று நடந்த தெப்பம் முட்டுத்தள்ளும் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் சாமி, அம்மனை தரிசனம் செய்தனர்.
மீனாட்சி அம்மன் கோவில் தை தெப்ப திருவிழா தொடங்கியது

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தை தெப்பத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அப்போது கொடிமரத்திற்கும், சாமிக்கும் சிறப்பு பூஜையுடன், தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
0