கேரள சபாநாயகர் ஸ்ரீ ராமகிருஷ்ணனுக்கு கொரோனா தொற்று

பினராயி விஜயன், உம்மன் சாண்டியை தொடர்ந்து கேரள சபாநாயகருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கேரள சட்டசபை தேர்தலில் தபால் ஓட்டுகளில் முறைகேடு- தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார்

தேர்தல் பணியில் ஈடுபட்டவர்களுக்கு தபால் ஓட்டு போட தனி மையங்கள் அமைக்கப்பட்டன. தபாலில் ஓட்டு போட்டவர்களுக்கும், வீடு மற்றும் அலுவலக முகவரியில் தபால் ஓட்டு சீட்டுகள் அனுப்பி வைக்கப்பட்டன.
கேரளாவில் நாளை ஒரே கட்டமாக தேர்தல்- 140 தொகுதிகளிலும் தயார் நிலையில் வாக்குச்சாவடிகள்

கேரளாவில் தேர்தல் பாதுகாப்பு பணிக்கு உள்ளூர் போலீசாருடன் துணை ராணுவ படையினரும் வரவழைக்கப்பட்டு உள்ளனர். சுமார் 400 துணை ராணுவ படையினர், 2400 போலீஸ் அதிகாரிகள், 1600 சிறப்பு அதிகாரிகள் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கேரளா சட்டசபை தேர்தல் - முதல் மந்திரி பினராயி விஜயன் கண்ணூரில் பிரசாரம்

கேரளா மாநிலத்தில் 15-வது சட்டசபைக்கான தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.
காங்கிரஸ், இடதுசாரி கூட்டணிகள் வாரிசு அரசியலை ஊக்குவிக்கின்றன -கேரளாவில் மோடி பிரசாரம்

புறந்தள்ளப்பட்ட கொள்கையை வைத்துக்கொண்டு கேரள கலாச்சாரத்தை சிதைப்பதை அனுமதிக்க முடியாது என பிரதமர் மோடி பேசினார்.
பா.ஜனதா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து கேரளாவில் நாளை பிரதமர் மோடி மீண்டும் பிரசாரம்

பிரதமர் மோடி, உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் ஆகியோரின் கேரள வருகையால் மாநிலத்திலுள்ள பாரதிய ஜனதா தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
கேரளாவில் இன்றும் நாளையும் பிரியங்கா காந்தி தேர்தல் பிரசாரம்

கேரளாவில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரியங்கா காந்தி இன்று பிற்பகல் திருவனந்தபுரம் காட்டாக்கடை பகுதிகளில் பிரசாரம் செய்கிறார்.
கேரளா அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் அடைவதே பாஜகவின் நோக்கம்- பிரதமர் மோடி

பாஜக அரசின் விவசாயிகளுக்கான கடன் அட்டை திட்டத்தால் 11 கோடி விவசாயிகள் பயனடைந்துள்ளனர். கேரளா அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் அடைவதே பாஜகவின் நோக்கம் என்று பிரதமர் மோடி கூறினார்.
தபால் வாக்குகளை பையில் சேகரித்த தேர்தல் அதிகாரிகள்- பெட்டி கொண்டு வரும்படி அடம்பிடித்த மூதாட்டி

மூடி முத்திரையிட்ட பெட்டி கொண்டு வாருங்கள். அதில் தான் தபால் வாக்கு சீட்டை போடுவேன் என்று 92 வயது மூதாட்டி பவானி அம்மா அடம்பிடித்தார்.
கேரள சபாநாயகர் பிளாட்டுக்கு வரும்படி கூறினார் - ஸ்வப்னா சுரேஷ் பரபரப்பு வாக்குமூலம்

கேரள தங்க கடத்தல் விவகாரம் தொடர்பாக தூதரக முன்னாள் ஊழியர் ஸ்வப்னா சுரேஷ் உள்பட 20 பேர் கைது செய்யபட்டு விசாரணை நடந்து வருகிறது.
பொருளாதார சீரழிவு: பாரதீய ஜனதா- இடதுசாரிகள் மீது ராகுல்காந்தி குற்றச்சாட்டு

நாட்டை பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீட்க பணப்புழக்கத்தை அதிகரிக்க வேண்டும் என்று ராகுல் காந்தி பேசியுள்ளார்.
கேரளாவில் தேர்தல் முடிவு வெளியாகும் முன்பே 3 தொகுதிகளை இழந்த பாஜக

கேரள சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா 115 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அதன் கூட்டணி கட்சிகளுக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது.
கோவில் பிரச்சனைகளில் அரசாங்கம் தலையிடக்கூடாது -கேரளாவில் அமித் ஷா பிரசாரம்

இடதுசாரி ஜனநாயக முன்னணி ஐக்கிய ஜனநாயக முன்னணி அரசாங்கங்கள் கேரளாவை ஊழலின் மையமாக ஆக்கிவிட்டதாக அமித் ஷா குற்றம்சாட்டினார்.
மக்கள் பிரச்சினைகள் குறித்து காங்கிரஸ், பாஜகவுக்கு பொறுப்பில்லை - பினராயி விஜயன்

கேரள சட்டசபைக்கு ஏப்ரல் 6-ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. அன்று பதிவாகும் வாக்குகள் மே 2-ல் எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.
கேரளாவில் இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ரூ.2 ஆயிரம் ஓய்வூதியம் - காங்கிரஸ் தேர்தல் அறிக்கை

கேரளாவில் ஏழைகளுக்காக 5 லட்சம் வீடுகள் கட்டித்தரப்படும் என காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கேரளாவில் காலியாகும் 3 மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு தேர்தல் தேதி அறிவிப்பு

தேர்தல் தொடர்பான அனைத்து பணிகளின்போதும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என தேர்தல் ஆணையம் கூறி உள்ளது.
கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் வேட்புமனு தாக்கல்

தர்மடம் தொகுதியில் 2-வது முறையாக போட்டியிடும் முதல்-மந்திரி பினராயி விஜயனை எதிர்த்து பாரதிய ஜனதா மூத்த தலைவர் பத்மனாபன் களம் இறங்குகிறார்.
கேரள பாஜக வேட்பாளர் பட்டியல்: மாநில தலைவர் சுரேந்திரன் 2 தொகுதிகளில் போட்டி

கேரளாவில் 115 தொகுதிகளில் பாஜக போட்டியிடும் நிலையில், இன்று 112 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
கேரளாவில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகிறது

டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளரும், கேரள மாநில காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளருமான தாரிக்அன்வருடன் கேரள மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர்.