பழனி முருகன் கோவிலில் சூரசம்ஹாரம்: பக்தர்கள் அனுமதிக்கப்படாததால் 1½ மணி நேரத்தில் நடந்து முடிந்தது

பழனி முருகன் கோவில் கந்தசஷ்டி திருவிழாவையொட்டி சூரசம்ஹாரம் நடந்தது. விழாவில் பக்தர்கள் அனுமதிக்கப்படாததால் 1½ மணி நேரத்தில் நடந்து முடிந்தது.
கோவில் முன்பு பக்தர்கள் திரண்டனர்: திருப்பரங்குன்றம் கோவிலில் சூரசம்ஹாரம்

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் வரலாற்றிலேயே முதல் முறையாக பக்தர்கள் பங்கேற்காத நிலையில் சூரசம்ஹாரம் நடந்தது.
குமரி மாவட்ட முருகன் கோவில்களில் சூரசம்ஹார நிகழ்ச்சி: திரளான பக்தர்கள் பங்கேற்பு

குமரி மாவட்ட முருகன் கோவில்களில் நடந்த சூரசம்ஹார நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கந்தசஷ்டி விழாவையொட்டி சுவாமிமலையில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி: பக்தர்களுக்கு அனுமதி இல்லாததால் ஏமாற்றம்

சுவாமிமலையில் கந்தசஷ்டி விழாவையொட்டி சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது. பக்தர்களுக்கு அனுமதி இல்லாததால் ஏமாற்றம் அடைந்தனர்.
வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவிலில் சூரசம்ஹாரம்

கந்தசஷ்டியையொட்டி வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவிலில் சூரசம்ஹாரம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் பக்தர்கள் இன்றி எளிமையாக நடந்தது

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்தசஷ்டி திருவிழாவில் சூரசம்ஹாரம் நடந்தது. விழாவில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி இல்லாததால் எளிமையாக நடைபெற்றது.
சூரசம்ஹாரம் உணர்த்தும் தத்துவம்

ஆணவம் அழிந்து ஞானமும் பெற்றுவிட்டால் எந்த ஆன்மாவுமந்தப் பரமாத்மாவோடு ஐக்கியமாகிவிடலாம் என்பது கந்த சஷ்டி சொல்லும் வாழ்க்கை ரகசியம்.
கந்தசஷ்டி விழாவிற்கான காரணங்கள்

ஞான சக்தி எனப்படும் வேலின் தாக்கத்தால் ஆணவம் அழிந்து பரம்பொருளின் திருவடி அடையலாம் என்பதை உணர்த்தவே கந்தசஷ்டி விரம் கடைப்பிடிக்கப்படுகிறது.
திருச்செந்தூர் கடற்கரையில் முதல் முறையாக பக்தர்கள் இன்றி இன்று மாலை சூரசம்ஹாரம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் முதல் முறையாக பக்தர்கள் இன்றி இன்று மாலை 4.30 மணிக்கு கடற்கரையில் நடக்கிறது.
பழனி முருகன் கோவிலில் சூரசம்ஹார நிகழ்ச்சியை பேஸ்புக், யுடியூப்பில் பக்தர்கள் பார்க்கலாம்

பழனி முருகன் கோவிலில் சூரசம்ஹார நிகழ்ச்சிகளை பொதுமக்கள் காணும் வகையில் கோவிலின் சமூக வலைத்தள பக்கத்தில் பதிவேற்றம் செய்யவும், டி.வி. சேனல்கள் வாயிலாக நேரலையில் காணவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மருதமலை முருகன் கோவிலில் இன்று சூரசம்ஹாரம்: பக்தர்களுக்கு அனுமதி இல்லை

மருதமலை முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹார விழா இன்று நடக்கிறது. இதில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை.
சிக்கல் சிங்காரவேலவர் கோவிலில் அம்மனிடம் இருந்து வேல் வாங்கிய பின்பு முருகனுக்கு வியர்வை சிந்திய காட்சி

சிக்கல் சிங்காரவேலவர் கோவிலில் வேல்நெடுங்கண்ணி அம்மனிடம் இருந்து முருகன் வேல் வாங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதை காண பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
தாயார் கோவர்த்தனா அம்பிகையிடம் “சக்திவேல்” பெற்ற முருகப்பெருமான்

திருப்பரங்குன்றம் முருகன் கோவில் கந்தசஷ்டி திருவிழாவில் இன்று மாலையில் சூரசம்ஹாரம் நடக்கிறது. இதனையொட்டி முருகப்பெருமான் தன் தாயாரான கோவர்த்தனா அம்பிகையிடம் சக்திவேல் பெற்றார்.
பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவிலில் இன்று சூரசம்ஹாரம்

பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழாவின் சிகர நாளான இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணி அளவில் சூரசம்ஹாரம் நடைபெறுகிறது.
கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு முருகன் கோவில்களில் இன்று சூரசம்ஹாரம்

கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு முருகன் கோவில்களில் இன்று (வெள்ளிக்கிழமை) சூரசம்ஹாரம் நடக்கிறது.
இன்று சூரசம்ஹாரம்: மௌன விரதம் இருந்தால் கோரிக்கைகள் நிறைவேறும்

கந்தசஷ்டி விழாவின் கடைசி நாளான இன்று (சூரசம்ஹாரம்) மௌன விரதம் அனுஷ்டிப்பதால் உங்கள் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று சூரசம்ஹாரம்

கந்த சஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று மாலை நடைபெறுகிறது. இதை முன்னிட்டு 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
திருச்செந்தூரில் கந்த சஷ்டி

திருச்செந்தூர் சூரனை வென்ற இடமானதால் கந்த சஷ்டி நிகழ்ச்சியானது இங்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது. முருகனின் செயல்கள் திரும்ப செய்து காட்டப்படுதலே இத்திருவிழாவின் நோக்கம் ஆகும்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாளை சூரசம்ஹாரம்: பக்தர்களுக்கு அனுமதி இல்லை

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்தசஷ்டி திருவிழாவில் நாளை (வெள்ளிக்கிழமை) சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. விழாவில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை.