கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டார் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ்

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் டெல்லியின் ஓக்லா பகுதியில் உள்ள ஃபோர்டிஸ் எஸ்கார்ட்ஸில் உள்ள மருத்துவமனையில் முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.
சென்னை மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட துணை ஜனாதிபதி

குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.
கோவாக்சின் தடுப்பூசி போட்டுக்கொண்ட மோடி... பாரத் பயோடெக் நிறுவனம் உற்சாகம்

தகுதி உடைய அனைத்து நபர்களும் கொரோனா தடுப்பு ஊசிகளை போட்டுக்கொள்ள வேண்டும் என பிரதமர் வேண்டுகோள் விடுத்தார்.
கொரோனா தடுப்பூசி போட கோ-வின் இணையதளத்தில் மட்டுமே பதிவு செய்ய வேண்டும்

கொரோனா தடுப்பூசி போடுவதற்காக கோ-வின் செயலியில் பயனர்கள் நேரடியாக பதிவு செய்ய முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் 3வது கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி

அமெரிக்காவில் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை அவசரகால தேவைகளுக்கு பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தனியார் மருத்துவமனைகளில் ஒரு டோஸ் கொரோனா தடுப்பூசி 250 ரூபாய்

தனியார் மருத்துவமனைகளில் ஒரு டோஸ் கொரோனா தடுப்பூசிக்கு 250 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கலாம் என அரசு கூறி உள்ளது.
பொறுமையாக இருங்கள்... தடுப்பூசிக்காக காத்திருக்கும் நாடுகளுக்கு சீரம் நிறுவனம் வேண்டுகோள்

இந்தியாவின் மருந்து தேவைகளுக்கு முன்னுரிமை அளிக்கும் அதேநேரம் பிற நாடுகளின் தேவைகளையும் பூர்த்தி செய்வதாக சீரம் நிறுவன சிஇஓ தெரிவித்துள்ளார்.
மக்களிடம் உள்ள அச்சத்தை போக்க முதல் ஆளாக தடுப்பூசி போட்டுக்கொண்ட ஆஸ்திரேலிய பிரதமர்

ஆஸ்திரேலியாவில் நாளை முதல் கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி போடும் பணி நடைபெற உள்ளது.
மாலத்தீவுக்கு மேலும் ஒரு லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசி மருந்துகள் வழங்கியது இந்தியா

மாலத்தீவுக்கு கூடுதலாக ஒரு லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசி மருந்துகளை இந்தியா வழங்கி உள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது

தென் ஆப்பிரிக்காவில் ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசி மருந்தை பயன்படுத்தி கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.
ஜப்பானில் முதல் கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி அளித்தது அரசு

ஜப்பான் நாட்டில் பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கப்பட்டதையடுத்து, தடுப்பூசி போடும் பணி தொடங்க உள்ளது.
இந்தியா அனுப்பிய 5 லட்சம் டோஸ் தடுப்பூசி மருந்து ஆப்கானிஸ்தான் சென்றடைந்தது

இந்தியா அனுப்பிய 5 லட்சம் டோஸ் தடுப்பூசி மருந்து ஆப்கானிஸ்தான் சென்றடைந்ததாகவும், நட்பு நாடுகளுக்கு இந்தியா எப்போதும் துணை நிற்கும் என்றும் வெளியுறவுத்துறை மந்திரி கூறி உள்ளார்.
பொதுமக்களுக்கு செலுத்தலாம்... சீனாவில் 2வது உள்நாட்டு கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல்

சீனாவின் சினோவாக் பயோடெக் உருவாக்கிய கொரோனா தடுப்பூசியை பொதுமக்களுக்கு பயன்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி விண்ணப்பத்தை திரும்ப பெற்றது பைசர்

இந்தியாவில் கொரோனா தடுப்பூசியை பயன்படுத்த அனுமதி கேட்டிருந்த பைசர் நிறுவனம் தனது விண்ணப்பத்தை திரும்ப பெற்றுள்ளது.
கொரோனா தடுப்பூசிகளுக்கு தடை கேட்ட மனு தள்ளுபடி

கொரோனா தடுப்பூசிகளை பயன்படுத்த தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர் நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது.
5 லட்சம் டோஸ் தடுப்பூசி மருந்து வழங்கியது இந்தியா... நன்றி தெரிவித்த இலங்கை அதிபர்

இலங்கைக்கு இந்தியா இலவசமாக வழங்கிய கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி மருந்துகளை கொழும்பு விமான நிலையத்தில் அந்நாட்டின் அதிபர் பெற்றுக்கொண்டார்.
இது 99.9 சதவீதம் கொரோனாவை கொல்லும்... விரைவில் வருகிறது சானோடைஸ் நேசல் ஸ்பிரே

கனடாவைச் சேர்ந்த சானோடைஸ் நிறுவனம் உருவாக்கி உள்ள ஸ்பிரே தடுப்பூசி மருந்து, 99.9 சதவீதம் கொரோனா வைரசை கொல்லும் செயல்திறன் வாய்ந்தது என பரிசோதனையில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
20 லட்சம் டோஸ் தடுப்பூசி மருந்து சென்றடைந்தது- மோடிக்கு நன்றி தெரிவித்த பிரேசில் பிரதமர்

இந்தியாவில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி மருந்துகள் பிரேசில் சென்றடைந்தன.
தமிழகத்தில் இதுவரை 42,947 சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி

தமிழகத்தில் இதுவரை 42 ஆயிரத்து 40 பேருக்கு ‘கோவிஷீல்டு‘ தடுப்பூசியும், 907 பேருக்கு ‘கோவேக்சின்‘ தடுப்பூசி என 42,947 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.