அபுதாபியில் காரில் இருந்தவாறே கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளும் வசதி

காரில் இருந்தவாறே கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளும் புதிய வசதியை அபுதாபி சுகாதாரத்துறை ஏற்பாடு செய்துள்ளது.
இந்தியாவிடம் இருந்து 1 கோடி தடுப்பூசி டோஸ்கள் வாங்கும் இலங்கை

இந்தியாவிடம் இருந்து 1 கோடி கோவிஷீல்டு தடுப்பூசி டோஸ்களை இலங்கை வாங்குகிறது. இதற்காக புனே சீரம் நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது.
ஐ.நா. அமைதிப்படைக்கு 2 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை இந்தியா இலவசமாக வழங்குகிறது

ஐ.நா.வின் அமைதிப்படைக்கு இரண்டு லட்சம் தடுப்பு மருந்து டோஸ்கள் இலவசமாக வழங்கப்படும் என்று இந்தியா அறிவித்துள்ளது.
தேர்தல் பணியாளர்களுடன் ரெயில்வே ஊழியர்களுக்கும் கொரோனா தடுப்பூசி- தமிழக அரசு ஏற்பாடு

தேர்தல் பணியாளர்களுடன் ரெயில்வே துறையில் பணியாற்றும் அதிகாரிகள், ஊழியர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு தேவையான தடுப்பு மருந்து எவ்வளவு என்பது குறித்து கணக்கெடுப்பு நடந்து வருகிறது.
மார்ச் முதல் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி கிடைக்கும்: மந்திரி சுதாகர்

கர்நாடகத்தில் வருகிற மார்ச் மாதம் முதல் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி கிடைக்கும் என்று சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் கூறினார்.
தடுப்பூசி போட்டு கொண்டாலும் கொரோனா தாக்கும்: தொற்று நோயியல் நிபுணர் தகவல்

தடுப்பூசி போட்டு கொண்டாலும் கொரோனா தாக்கும். அவரிடம் இருந்து பலருக்கு வைரஸ் பரவும் என்று தொற்று நோயியல் நிபுணர் பரபரப்பு தகவலை கூறியுள்ளார்.
இந்திய மருந்து நிறுவனம் தயாரித்த தடுப்பூசிக்கு ஒப்புதல் - உலக சுகாதார நிறுவனம் வழங்கியது

இந்திய சீரம் நிறுவனம் தயாரித்து வழங்கும் அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனத்தின் தடுப்பூசிக்கு அவசர கால பயன்பாட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
அஸ்ட்ரா ஜெனகா - ஆக்ஸ்போர்டு தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல்

அஸ்ட்ரா ஜெனகா - ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் இணைந்து கண்டறிந்த கொரோனா தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டிற்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது.
கர்நாடகத்தில் 2-வது கட்ட கொரோனா தடுப்பூசி போடும் பணி இன்று தொடக்கம்

கர்நாடகத்தில் ஒரு சில காரணங்களால் கடந்த 13-ந் தேதி 2-வது கட்ட தடுப்பூசி பணி தொடங்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில், பெங்களூரு உள்பட கர்நாடக மாநிலம் முழுவதும் இன்று (திங்கட்கிழமை) 2-வது கட்டமாக தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட உள்ளது.
1.5 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு உள்ளன - போரிஸ் ஜான்சன்

கொரோனா பாதிப்புக்கு 1.5 கோடி பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டு உள்ளன என இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார்.
தமிழகத்தில் இதுவரை 2 லட்சத்து 27 ஆயிரத்து 340 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது

தமிழகத்தில் இதுவரை 2 லட்சத்து 23 ஆயிரத்து 302 பேருக்கு ‘கோவிஷீல்டு' தடுப்பூசி, 4 ஆயிரத்து 38 பேருக்கு ‘கோவேக்சின்' தடுப்பூசி என 2 லட்சத்து 27 ஆயிரத்து 340 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
சர்வதேச நாடுகளுக்கு 2.29 கோடி தடுப்பு மருந்துகளை வழங்கிய இந்தியா

இந்தியா சர்வதேச நாடுகளுக்கு இதுவரை 2.29 கோடி கொரோனா தடுப்பு மருந்துகளை வழங்கியுள்ளது.
கொரோனா இரண்டாம் தவணைத் தடுப்பூசி போடும் இயக்கம் இன்று தொடக்கம்

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு இரண்டாம் தவணைத் தடுப்பூசி போடும் இயக்கம் இன்று தொடங்க உள்ளது.
மருத்துவ மாணவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வர வேண்டும்: மந்திரி சுதாகர்

கர்நாடகத்தில் மருத்துவ மாணவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வர வேண்டும் என்று சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் கூறினார்.
கொரோனா தடுப்பூசி எடுத்து கொண்டவர்களில் 97 சதவீதத்தினர் திருப்தி - மத்திய சுகாதார அமைச்சகம்

கொரோனா தடுப்பூசி எடுத்து கொண்டவர்களில் 97 சதவீதத்தினர் திருப்தி அடைந்துள்ளனர் என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உலகின் 70 சதவீத கொரோனா தடுப்பு மருந்து தேவையை இந்தியா பூர்த்தி செய்கிறது - அமித்ஷா

இந்தியாவிலிருந்து 14 நாடுகளுக்கு தடுப்பூசி மருந்து அனுப்பி வைக்கப்படுகிறது என உள்துறை மந்திரி தெரிவித்தார்.
வங்காளதேசத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்கம்

வங்காளதேசத்தில் பொது மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்டது.
2 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி பரிசோதனை - இந்த மாதம் இறுதியில் தொடங்குகிறது

கோவேக்சின் மருந்தை தயாரித்துள்ள பாரத் பயோ டெக் நிறுவனம் குழந்தைகளுக்கான தடுப்பூசி பரிசோதனையை இந்த மாதம் இறுதியில் செய்யப்போவதாக அறிவித்துள்ளது.
தெலுங்கானாவில் போலீஸ், பாதுகாப்பு படையினருக்கு இன்று முதல் கொரோனா தடுப்பூசி

தெலுங்கானாவில் போலீஸ், பாதுகாப்பு படையினருக்கு இன்று முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட உள்ளது.