விவசாயிகள் வங்கி கணக்கில் ரூ.510 கோடி செலுத்தப்பட்டது- வேளாண்துறை செயலாளர் தகவல்

நிவர், புரெவி புயல்களுக்காக ஒதுக்கப்பட்ட ரூ.592 கோடியில் தற்போது வரை ரூ.510 கோடி விவசாயிகள் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக தமிழக வேளாண் துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.
நிவர், புரெவி புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.600 கோடி இடுபொருள் நிவாரணம் - முதலமைச்சர் அறிவிப்பு

நிவர் மற்றும் புரெவி புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.600 கோடி இடுபொருள் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
புரெவி புயல் சேதங்களை பார்வையிடும் மத்திய குழு- 3 மாவட்டங்களில் இன்று சுற்றுப்பயணம்

தமிழகத்தில் புரெவி புயலால் ஏற்பட்ட சேதங்களை பார்வையிடுவதற்காக வந்துள்ள மத்திய குழுவினர் இன்று ராமநாதபுரம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் சுற்றுப் பயணம் மேற்கொள்கின்றனர்.
புரெவி புயல் சேத விவர அறிக்கை கிடைத்தவுடன் விரைவாக நிவாரணம்- தமிழக அரசு அறிவிப்பு

‘புரெவி’ புயல் பாதிப்புகளை பார்வையிட 28-ந்தேதி மத்திய குழு வருகை தர இருக்கிறது. சேத விவர அறிக்கை கிடைத்தவுடன் விரைவாக நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்துக்கு மத்திய குழு 28-ந்தேதி வருகை

தமிழகத்தில் புரெவி புயலால் ஏற்பட்ட சேதங்களை பார்வையிடுவதற்காக மத்திய குழுவினர் 28-ந்தேதி இங்கு வருகின்றனர்.
புயல் பாதிப்புக்கு மத்திய குழுவிடம் தேவையான நிதியை தமிழக அரசு கேட்டுள்ளது- முதலமைச்சர்

நிவர் புயல் பாதிப்புக்கு மத்திய குழுவிடம் தேவையான நிதியை தமிழக அரசு கேட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும்- சரத்குமார்

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.5 ஆயிரம் நிவாரண உதவி வழங்க வேண்டும் என சரத்குமார் வலியுறுத்தியுள்ளார்.
‘புரெவி’ புயலால் பாதிப்பு- எடப்பாடி பழனிசாமி கடலூரில் ஆய்வு

கடலூர் மாவட்டத்தில் புரெவி புயலால் ஏற்பட்ட சேதங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி 2வது முறையாக இன்று பார்வையிடுகிறார்.
ஏரிகள், குளங்களை நிரப்பிய ‘புரெவி’ புயல்

புரெவி புயல் காரணமாக திருச்சி, பெரம்பலூர், அரியலுர், புதுக்கோட்டை, கரூர் மாவட்டங்களில் பெரும்பாலான ஏரிகள், குளங்கள் நிரம்பி உள்ளன.
கடலூர் வெள்ள பாதிப்புக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்- ராமதாஸ் கோரிக்கை

சிறப்பு திட்டம் கொண்டு வந்து கடலூர் வெள்ள பாதிப்புக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
கனமழை- காரைக்காலில் பள்ளிகளுக்கு விடுமுறை

காரைக்காலில் பெய்து வரும் கனமழை காரணமாக இன்றும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வீராணம், பெருமாள் ஏரிகளில் தண்ணீர் திறப்பு- 30 கிராமங்களை தண்ணீர் சூழ்ந்தது

வீராணம், பெருமாள் ஏரிகளில் தண்ணீர் திறந்து விடப்பட்டதால் 30 கிராமங்களை தண்ணீர் சூழ்ந்துள்ளது. குறிஞ்சிப்பாடி திட்டுவெளி கிராமம் தனித்தீவாக மாறியது.
புயல் மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெறவில்லை - முக ஸ்டாலின் குற்றச்சாட்டு

மத்திய அரசின் உதவியை எதிர்பார்த்து காத்திருக்காமல், புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதலமைச்சர் உடனடியாக நிதி வழங்க வேண்டும் என்று எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
புயல் நிவாரணப் பணி -கடலூர் மாவட்டத்திற்கு மேலும் ஒரு அமைச்சர் நியமனம்

கடலூர் மாவட்டத்தில் மழை, புயல் நிவாரண பணிகளை மேற்கொள்ள மேலும் ஒரு அமைச்சரை நியமித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
ஆந்திராவில் கனமழை- 5 ஆண்டுக்கு பிறகு 1,190 ஏரிகள் நிரம்பியது

கடந்த 2 வாரமாக பெய்து வரும் கனமழையால் சித்தூர் மாவட்டத்தில் 1,190 ஏரிகள் நிரம்பி வழிந்தன. ஏராளமான ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் மழை, வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட மு.க.ஸ்டாலின்

திருவாரூர் அருகே அம்மையப்பன், காவனூர், கணிதம், கமலாபுரம் உள்ளிட்ட இடங்களில் ஏற்பட்ட பாதிப்புகளை மு.க.ஸ்டாலின் இன்று காலை பார்வையிட்டார். பாதிக்கப்பட்ட நபர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.
புயல், மழையால் பாதிப்பு- சென்னையில் மத்திய குழு ஆய்வு

புயலால் பாதிக்கப்பட்ட சென்னையில் வேளச்சேரி, பள்ளிக்கரணை உள்ளிட்ட இடங்களில் மத்திய குழுவினர் நேரில் சென்று ஆய்வில் ஈடுபட்டனர்.
26 லட்சம் ஏழைகளுக்கு 3 வேளை இலவச உணவு திட்டம்- அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்

புயலால் வாழ்வாதாரத்தை இழந்த குடிசை பகுதிகளில் வாழும் 5.3 லட்சம் குடும்பங்களை சார்ந்த 26 லட்சம் பேருக்கு சுடச்சுட இலவச உணவு வழங்கும் திட்டம் இன்று தொடங்கி வைக்கப்பட்டது.
மேலும் வலுவிழந்தது புரெவி புயல்

மன்னார் வளைகுடாவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இருந்த புரெவி புயல், குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்து அதே பகுதியில் நிலை கொண்டுள்ளது.