அ.தி.மு.க. கூட்டணியில் குறைந்த தொகுதிகளை ஒதுக்கினால் தனித்து போட்டியிட தேமுதிக முடிவு

அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள தேமுதிக 40 தொகுதிகளை கேட்டு வருகிறது. அவர்கள் கொடுக்காத பட்சத்தில் 234 தொகுதிகளிலும் தனித்து களமிறங்கவும் திட்டமிட்டுள்ளது.
கூட்டணி பற்றி விரைவில் அறிவிப்பேன்- கமல்ஹாசன் பேட்டி

மக்கள் நீதி மய்யம் கட்சியின் அரசியல் நிலைப்பாட்டையும், யாருடன் கூட்டணி என்பதையும் விரைவில் அறிவிப்போம் என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.
மு.க.ஸ்டாலினே போட்டியிட்டாலும் ராயபுரம் தொகுதியில் தி.மு.க. டெபாசிட் இழக்கும் -ஜெயக்குமார்

மு.க.ஸ்டாலினே போட்டியிட்டாலும் சரி ராயபுரம் தொகுதியில் தி.மு.க. படுதோல்வி அடையும் என்று தன்னம்பிக்கையோடு சொல்கிறேன் என்று அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறியுள்ளார்.
மு.க.ஸ்டாலின் தேர்தல் சுற்றுப்பயணம்- அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்

கொளத்தூர் தொகுதியில் வாங்கிய மனுக்களுக்கே இன்னும் ஸ்டாலின் தீர்வு காணவில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார்.
இந்திய விவசாயத்தை அழிக்கவே 3 சட்டங்கள்... கரூர் பிரசாரத்தில் ராகுல் காந்தி தாக்கு

இந்திய விவசாயத்தை அழிப்பதற்காக 3 வேளாண் சட்டடங்களை பிரதமர் கொண்டு வந்திருப்பதாக ராகுல் காந்தி பேசினார்.
உங்கள் தொகுதியில் ஸ்டாலின்- புதிய கோணத்தில் திமுக பிரசாரம்

‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற பெயரில் வரும் 29 முதல் புதிய கோணத்தில் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக மு.க.ஸ்டாலின் கூறினார்.
மக்களுக்கான முக்கிய வாக்குறுதிகள்- முக ஸ்டாலின் அறிவிக்கிறார்

அடுத்தகட்ட பிரசாரம் மற்றும் மக்களுக்கு கொடுக்கப்போகும் முக்கிய வாக்குறுதிகள் குறித்து, சென்னை கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதி இல்லத்தில் மு.க.ஸ்டாலின் இன்று (திங்கட்கிழமை) அறிவிக்க உள்ளார்.
தமிழ் கலாச்சாரத்தை பிரதமர் மோடி அவமதிப்பதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன்- ராகுல் காந்தி

திருப்பூர் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய ராகுல்காந்தி தமிழ் என்பது மொழி, கலாச்சாரம், வரலாறு கொண்டது என கூறியுள்ளார்.
"வேல் எடுத்தால் சூரசம்ஹாரம் தான்" - துரைமுருகன் கருத்து

மு.க.ஸ்டாலின் கையில் வேலை எடுத்தது அதிமுகவை சூரசம்ஹாரம் செய்யத்தான் என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
கூட்டணி பேச்சுவார்த்தையை அதிமுக உடனே தொடங்க வேண்டும்- பிரேமலதா பேட்டி

கூட்டணி பேச்சுவார்த்தையை அதிமுக உடனே தொடங்க வேண்டும். காலதாமதம் செய்ய கூடாது என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
தமிழகத்தை மின்மிகை மாநிலமாக மாற்றியுள்ளோம் - எடப்பாடி பழனிசாமி பெருமிதம்

தமிழகத்தை மின்மிகை மாநிலமாக மாற்றியுள்ளோம் என கோவையில் நடந்த பிரச்சாரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுமாறு தி.மு.க. நிர்பந்திக்கவில்லை- ஜவாஹிருல்லா பேட்டி

உதயசூரியன் சின்னத்தில் கூட்டணி கட்சிகள் போட்டியிட வேண்டும் திமுக நிர்பந்திப்பதாக கூறுவது தவறான தகவல். அவ்வாறு எந்த நிர்பந்தமும் அவர்கள் விதிக்கவில்லை என்று ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.
ஓட்டுக்காக ஸ்டாலின் வேல் தூக்குகிறார்- எல் முருகன் தாக்கு

ஓட்டுக்காக முக ஸ்டாலின் வேல் தூக்குகிறார் என்று பா.ஜ.க. மாநில தலைவர் எல் முருகன் குற்றம் சாட்டியுள்ளார்.
சமூக வலைதளங்களை பயன்படுத்தி அதிமுக பொய் பிரசாரத்தில் ஈடுபடுகிறது- கனிமொழி குற்றச்சாட்டு

சமூக வலைதளங்களை பயன்படுத்தி அ.தி.மு.க. பொய் பிரசாரத்தில் ஈடுபடுவது சரியல்ல என்று ராமநாதபுரத்தில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் கனிமொழி எம்பி குற்றம் சாட்டியுள்ளார்.
சசிகலாவுக்கு திடீர் ஆதரவு: அதிக இடங்களை குறிவைத்து காய் நகர்த்தும் தேமுதிக

அதிமுக கூட்டணியில் இருக்கும் தேமுதிக பொருளாளர் பிரேமலதா, சசிகலாவுக்கு திடீரென ஆதரவு தெரிவித்து பேசி இருப்பது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தலுக்காகவே மு.க.ஸ்டாலின் ‘வேல்’ பிடித்துள்ளார்- எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு

கோவை மாவட்ட மக்கள் குடிநீர் தேவையை போக்க கூட்டு குடிநீர் திட்டத்தை கொண்டு வந்துள்ளதாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட எடப்பாடி பழனிசாமி பேசினார்.
மதசார்பின்மையை ஆதரிக்கும் கமல் திமுக கூட்டணிக்கு வரவேண்டும்- கார்த்தி சிதம்பரம் பேட்டி

கமல் தனித்து நின்றால் சொற்ப வாக்குகளையே பெறுவார். மதச்சார்பின்மையை சார்ந்திருக்கும் அவர் தி.மு.க. கூட்டணிக்கு வர வேண்டும் என்று கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார்.
ஸ்டாலின் கையில் வேல் எடுத்தாலும் கடவுள் வரம் கொடுக்க மாட்டார் -எடப்பாடி பழனிசாமி

கோவையில் இரண்டாவது நாளாக பிரசாரம் மேற்கொண்டுள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை கடுமையாக விமர்சனம் செய்தார்.
முருகனின் வேல் திமுகவை விரட்டியடிக்கும்... ராசிபுரத்தில் எல்.முருகன் பிரசாரம்

முருகனின் வேலை ஸ்டாலின் ஏந்தியதாகவும், மிக விரைவில் முருகனின் வேல் திமுகவை விரட்டியடிக்கும் என்றும் எல்.முருகன் பிரசாரத்தின்போது பேசினார்.