அதிமுகவில் விருப்ப மனு தொடங்கியது- எடப்பாடியில் போட்டியிட முதலமைச்சர் பழனிசாமி மனு

போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிட துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி தொகுதியில் போட்டியிட முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் விருப்ப மனு அளித்தனர்.
தமிழக சட்டமன்ற தேர்தல்- அதிமுகவில் விருப்பமனு விநியோகம் தொடக்கம்

தமிழக சட்டமன்ற தேர்தலுக்காக அ.தி.மு.க.வில் விருப்பமனு விநியோகம் இன்று தொடங்கியது. விருப்பமனு விநியோகத்தை எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்- அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி

வருகிற சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம், என்று ஆரணியில் பேட்டியளித்த அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.
ஆட்சியில் பங்கேற்பது குறித்து தேசிய தலைமை முடிவு செய்யும்- எல். முருகன் பேட்டி

அமைச்சரவையில் பங்கு குறித்து தேர்தலுக்கு பிறகு தேசிய தலைமை முடிவு செய்யும் என்று எல் முருகன் கூறியுள்ளார்.
மீண்டும் அதிமுக ஆட்சி அமைய வேண்டி கோவிலில் கிடாய் வெட்டி சிறப்பு பூஜை செய்த எம்எல்ஏ

தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைய வேண்டி கோவிலில் 14 கிடாய் வெட்டி எம்.எல்.ஏ. நாகராஜன் சிறப்பு பூஜை செய்தார்.
சட்டசபையில் நாளை இடைக்கால பட்ஜெட்- ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார்

தமிழக சட்டசபையில் நாளை (செவ்வாய்க்கிழமை) இடைக்கால பட்ஜெட்டை துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார். அதில் கவர்ச்சிகரமான அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு இருக்கிறது.
அதிமுக- பாஜக கூட்டணி பெரும்பான்மை பலம் பெறும்- ராஜ்நாத் சிங்

அதிமுக- பாஜக கூட்டணி பெரும்பான்மை பலத்துடன் சட்ட பேரவைக்குள் நுழைய வேண்டும் என்று ராஜ்நாத் சிங் பேசியுள்ளார்.
பா.ஜனதா- அதிமுக கூட்டணி உறுதி- இல.கணேசன் பேட்டி

பா.ஜனதா-அ.தி.மு.க. கூட்டணி உறுதி. இதனை உணர்த்துவதற்காகத்தான் முதல்-அமைச்சர் மற்றும் துணை முதல்-அமைச்சரின் கைகளை பிரதமர் உயர்த்தி காண்பித்தார் என்று இல.கணேசன் கூறியுள்ளார்.
வருகிற 24-ந்தேதி ஜெயலலிதா சிலைக்கு எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவிக்கிறார்கள்

சென்னை ராயப்பேட்டை தலைமை கழக வளாகத்தில் அமைந்துள்ள ஜெயலலிதாவின் சிலைக்கு ஒருங்கிணைப்பாளர் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மாலை அணிவித்து, மலர்தூவி, கட்சி கொடி ஏற்றி இனிப்பு வழங்குகிறார்கள்.
எடப்பாடி ஆட்சியில் தமிழகம் வெற்று நடை தான் போடுகிறது- மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் தமிழகம் வெற்றி நடைபோடவில்லை என்றும் வெற்று நடைதான் போடுகிறது என்றும் மு.க.ஸ்டாலின் பேசினார்.
24-ந்தேதி ஜெயலலிதா பிறந்த நாள் பொதுக்கூட்டம்: ஆர்.கே.நகரில் எடப்பாடி பழனிசாமி பேசுகிறார்

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 73-வது பிறந்த நாளை முன்னிட்டு 4 நாட்கள் அ.தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.
ஓபிஎஸ் சசிகலாவிற்கு ஆதரவு கொடுத்தால் வரவேற்போம்- டிடிவி தினகரன்

அ.ம.மு.க தலைமையில் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்து வெற்றி பெற்ற பிறகு அ.தி.மு.கவை மீட்டெடுப்போம் என டி.டி.வி.தினகரன் கூறினார்.
அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க, ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது- துரைமுருகன்

தமிழக அமைச்சர்கள் மீதான 2-வது ஊழல் பட்டியலை கவர்னரை சந்தித்து தி.மு.க.வினர் அளித்தனர்.
அ.தி.மு.க. அமைச்சர்கள் மீது தி.மு.க. 2-வது ஊழல் பட்டியல்

தமிழக அமைச்சர்கள் மீது 2-வது ஊழல் பட்டியலை தி.மு.க. தயாரித்துள்ளது. இந்த பட்டியலை இன்று மாலை கவர்னரிடம் தி.மு.க.வினர் வழங்குகிறார்கள்.
கொங்கு மண்டலத்தில் திமுக கூட்டணி அபார வெற்றி பெறும்- மு.க.ஸ்டாலின்

வருகிற சட்டமன்ற தேர்தலில் கொங்கு மண்டலத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் தி.மு.க கூட்டணி அபார வெற்றி பெறும் என மு.க.ஸ்டாலின் கூறினார்.
மதுரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஊழலா?: மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் செல்லூர் ராஜூ சவால்

மு.க.ஸ்டாலினின் ஜீபூம்பா வேலை மக்களிடம் எடுபடாது என்றும் அ.தி.மு.க. மீண்டும் அமோக வெற்றி பெற்று மூன்றாவது முறையாக தொடர்ந்து ஆட்சியில் அமரும் என்றும் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.
சிஏஏ போராட்ட வழக்குகள் ரத்து- முதலமைச்சர் அறிவிப்பு

தமிழகம் முழுவதும் 10 லட்சத்துக்கும் அதிகமான வழக்குகள் ரத்து செய்யப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீட்டை அறிவிக்க அதிமுக-வில் புதிய வியூகம்

கூட்டணி கட்சிகளுக்கு இடங்களை ஒதுக்கீடு செய்வதில் அதிமுக அதிரடி வியூகத்தை வகுத்துள்ளது.
சசிகலா, தினகரனுக்கு அதிமுகவில் எந்த உரிமையும் இல்லை- அமைச்சர் ஜெயக்குமார்

அதிமுகவில் சசிகலா, தினகரனுக்கு எந்த உரிமையும் இல்லை என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.