மக்கள் பா.ஜனதா பக்கம் இருக்கிறார்கள்- குஷ்பு மகிழ்ச்சி

மக்கள் தங்களுக்காக உழைப்பவர்களுக்கு வாக்களிப்பார்கள். நாங்கள் மக்களுடன் இருக்கிறோம் என்று பா.ஜனதா பிரமுகருமான குஷ்பு தெரிவித்துள்ளார்.
பஞ்சாபில் 92 இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடித்தது ஆம் ஆத்மி- தேர்தல் முடிவின் முழு விவரம்

ஆம் ஆத்மி 42.01 சதவீத வாக்குகளும், காங்கிரஸ் 22.98 சதவீத வாக்குகளும், ஷிரோமணி அகாலி தளம் 18.38 சதவீத வாக்குகளும் பெற்றுள்ளன.
பிரதமரின் நலத்திட்டங்களில் மக்கள் வைத்த நம்பிக்கைதான் பாஜகவின் வெற்றிக்கு காரணம்- அமித் ஷா

பிரதமர் நரேந்திர மோடியின் கிராமங்கள், ஏழைகள் மற்றும் விவசாயிகளுக்கான நலத் திட்டங்களில் மக்கள் நம்பிக்கை வைத்ததன் எதிரொலியால் உத்தர பிரதேசத்தில் பாஜக மகத்தான வெற்றிப் பெற்றுள்ளது என்று அமித் ஷா கூறியுள்ளார்.
5 மாநில தேர்தல் முடிவுகள் கர்நாடகாவில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் - முதல்வர் பொம்மை

நாடு முழுவதும் உள்ள மக்களுடன் தொடர்பில் உள்ள ஒரே தலைவர் மோடிதான் என்பதை முடிவுகள் காட்டுகின்றன என்று கர்நாடகா முதல்வர் பொம்மை தெரிவித்துள்ளார்.
ஆம் ஆத்மியின் வெற்றி புரட்சிகரமானது- அரவிந்த் கெஜ்ரிவால்

பஞ்சாப் தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றியின் மூலம், கெஜ்ரிவால் பயங்கரவாதி அல்ல. நாட்டை கொள்ளையடிப்பவர்களே பயங்கரவாதிகள் என்று மக்கள் பதிலளித்துள்ளனர் என கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
அமிர்தசரஸ் கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் தலைவர் சித்து தோல்வி

பஞ்சாபில் உள்ள அமிர்தசரஸ் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை 13 சுற்றுகள் முடிவடைந்த நிலையில், சித்து 32929 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.
5 மாநில தேர்தல் முடிவு- பா.ஜனதா பாராளுமன்ற குழு இன்று மாலை கூடுகிறது

பா.ஜனதா பாராளுமன்ற குழுக்கூட்டத்தில் தேர்தல் முடிவுகள் பற்றி விவாதிக்கப்படுகிறது. அமித்ஷா, ராஜ்நாத்சிங், ஜே.பி.நட்டா உள்பட உயர்மட்ட தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.
மணிப்பூர், கோவாவில் பாஜகவுக்கு கிடைத்த வெற்றி தமிழகத்திலும் நிகழும்- அண்ணாமலை நம்பிக்கை

உத்தர காண்ட்டில் வெற்றிக் கொண்டாட்டததை காங்கிரஸ் ஆரம்பித்ததாகவும், ஆனால் மக்கள் தீர்ப்பு பாஜகவுக்கு ஆதரவாக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
4 மாநிலங்களில் பா.ஜனதா ஆட்சி- பஞ்சாபில் சுனாமியாக மாறிய ஆம் ஆத்மி

5 மாநில சட்டசபை தேர்தலில் பஞ்சாப் தவிர 4 மாநிலங்களில் பா.ஜ.க. ஆட்சி அமைக்கிறது. காங்கிரஸ் கட்சி வரலாறு காணாத தோல்வியை சந்தித்துள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் கணிப்புகளை மிஞ்சிய வெற்றி- காங்கிரஸ் செய்த தவறால் இமாலய சக்தியாக மாறிய ஆம் ஆத்மி

கடந்த 10 ஆண்டுகளாக பஞ்சாப் மாநிலத்தில் சிறப்பாக ஆட்சி புரிந்த காங்கிரஸ் முதல்- மந்திரியான அம்ரீந்தர்சிங் - சித்துவுக்கு இடையே ஏற்பட்ட மோதல், காங்கிரஸ் கட்சியில் பெரும் பிளவை ஏற்படுத்தியது.
கோவாவில் ஆட்சி அமைக்க உரிமை கோருகிறது பாஜக

நான்கு மாநிலங்களில் பாஜக பெற்று வரும் வெற்றியை லக்னோ மற்றும் பெங்களூருவில் அக்கட்சி தொண்டர்கள் கொண்டாடினர்.
18 தொகுதிகளில் முன்னிலை- கோவாவில் பா.ஜனதா ஆட்சியை பிடிக்க வாய்ப்பு

கோவாவில் மதியம் 12 மணி நிலவரப்படி பா.ஜனதா 18 இடங்களில் முன்னிலையில் இருந்தது. காங்கிரஸ் கூட்டணி 11 இடங்களில் முன்னிலை வகித்தது. மற்றவர்கள் 9 இடங்களிலும் முன்னிலை வகித்தனர்.
மணிப்பூரில் பா.ஜனதா ஆட்சியை பிடிக்கிறது

மணிப்பூரில் பாரதிய ஜனதா 29 தொகுதிகளில் முன்னிலையில் இருந்தது. காங்கிரஸ் கூட்டணி 7 தொகுதிகளில் முன்னிலை வகித்தது.
5 மாநில தேர்தல் முடிவு எப்படி இருக்கும்?

மத்திய அரசை பொறுத்தவரை 5 மாநில தேர்தல் அரை இறுதி ஆட்டம் போன்று கருதப்படுகின்றது. 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கு இந்த 5 மாநில தேர்தல் ஒரு முன்னோட்டமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
உத்தரபிரதேசத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் 4 நாட்கள் தேர்தல் பிரசாரம்

ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்-மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரபிரதேசத்தில் இன்று முதல் 4 நாட்கள் சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்கிறார்.
0