ஜெர்மனியின் அதிபராக ஹிட்லர் பதவியேற்ற நாள்: 30-1-1933

ஜெர்மனியின் நாசிக் கட்சியின் தலைவராக விளங்கிய அடால்ப் ஹிட்லர் 1933-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இதே தேதியில் ஜெர்மனி நாட்டின் அதிபராக நியமிக்கப்பட்டார்.
வடஅமெரிக்காவில் இராணுவத்தால் நூற்றுக்கணக்கான பழங்குடிகள் கொல்லப்பட்ட நாள் - ஜன. 29, 1863

1863-ம் ஆண்டு ஜனவரி மாதம் இதே தேதியில் இடாகோ மாநிலத்தில் பெயார் ஆற்றுக்கு அருகில் இராணுவத்துடன் நடந்த மோதலில் நூற்றுக்கணக்கான பழங்குடியினர் கொல்லப்பட்டனர்.
ஷேக்ஸ்பியரின் ரோமியோ ஜூலியட் நாடகம் முதன்முதலாக அரங்கேறியது - ஜன. 29, 1595

ஆங்கிலக் கவிஞரும், நாடக ஆசிரியருமான வில்லியம் ஷேக்ஸ்பியர் ஆங்கில மொழியின் மிகப்பெரும் எழுத்தாளர் என்றும், உலகின் மிகப் புகழ் வாய்ந்த நாடக ஆசிரியர் என்றும் குறிப்பிடப்படுபவர்.
கருக்கலைப்பை முதன்முதலாக சட்டபூர்வமாக்கிய ஐஸ்லாந்து - ஜன.28- 1935

கருக்கலைப்பு என்பது முதிர்கருவைக் கர்ப்பிணிப் பெண்ணின் கருப்பையில் இருந்து அகற்றி அதனை அழித்துவிடுதல் ஆகும்.
சென்னையில் முதன்முதலாக தொலைபேசி அறிமுகப்படுத்தப்பட்ட நாள் - ஜன.28- 1882

சென்னையில் முதன்முதலாக 1882-ம் ஆண்டு ஜனவரி 28-ந்தேதி தொலைபேசி அறிமுகப்படுத்தப்பட்டது.
நைஜீரிய ராணுவக் கிடங்கில் ஏற்பட்ட குண்டு வெடிப்பில் ஆயிரம் பேர் பலி - ஜன.27- 2002

நைஜீரியாவில் கடந்த 2002-ம் ஆண்டு ராணுக் கிடங்கில் பயங்கர குண்டுவெடிப்பு நடைபெற்றது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள்.
விண்கலம் வெடித்து 3 வீரர்கள் பலி - ஜன.27- 1967

அமெரிக்காவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் அப்பொல்லோ 1 விண்வெளி வீரர்கள் 3 பேர் விண்கலத்தை பரிசோதிக்கும்போது அது வெடித்து தீப்பற்றிது. இதில் அந்த 3 பேரும் பலியானார்கள்.
இந்திய குடியரசு நாள் - ஜன.26- 1950

இந்தியாவுக்கு 1947-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 15-ந்தேதி சுதந்திரம் கிடைத்தது. அதன்பின் 1950-ம் ஆண்டு குடியரசு நாடாக அறிவிக்கப்பட்டது.
குஜராத்தில் ஏற்பட்ட பூகம்பம் - ஜன.26-2001

குஜராத்தில் 2001-ம் ஏற்பட்ட பயங்கர பூகம்பத்தால் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் இறந்தனர்.
இந்தியா- தேசிய வாக்காளர் தினம் - ஜன.25

தேசிய வாக்காளர் தினம் என்பது இந்திய அரசாங்கத்தால் இளம் வாக்களர்களை ஊக்கப்படுத்துவதற்காக இந்த தினம் அனுசரிக்கபடுகிறது.
இந்தியாவின் 18-வது மாநிலமாக இமாசலப் பிரதேசம் உருவான நாள் - ஜன.25-1971

1948 முதல் இந்தியாவின் ஒரு ஆட்சிப் பிரதேசமாக விளங்கி வந்த இமாசலப் பிரதேசம், இந்தியாவின் 18-வது மாநிலமாக 25 ஜனவரி 1971-ல் அறிவிக்கப்பட்டது.
தெற்காசியாவின் முதல் பல்கலைக்கழகம் கல்கத்தாவில் திறக்கப்பட்ட நாள் - ஜன.24- 1857

தெற்காசியாவில் முதல் பல்கலைக்கழகம் கல்கத்தாவில் முதன்முதலாக 1857-ம் ஆண்டு ஜனவரி 24-ந்தேதி திறக்கப்பட்டது.
ஏர் இந்தியா விமான விபத்தில் 117 பேர் பலி - ஜன.24- 1966

ஏர் இந்தியா விமானம் ஒன்று பிரான்சுக்கும் இத்தாலிக்கும் இடையில் வீழ்ந்ததில் 117 பேர் கொல்லப்பட்டனர்.
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த தினம் ஜன. 23, 1897

இந்திய மக்களால் நேதாஜி என்று மரியாதையுடன் அழைக்கப்படும் சுபாஷ் சந்திர போஸ் 1897-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இதேநாளில் வங்காள இந்து குடும்பத்தில் பிறந்தார்.
சென்னை மாநிலத்தில் தமிழ் ஆட்சி மொழியாக அறிவிக்கப்பட்டது ஜன.23, 1957

திராவிட மொழிக் குடும்பத்தின் முதன்மையானது, செம்மொழியுமான தமிழ் 1957 ஆம் ஆண்டு இதே நாளில் சென்னை மாநிலத்தின் ஆட்சி மொழியாக அறிவிக்கப்பட்டது.
ஜெட் விமானம் முதன் முறையாக சேவைக்கு வந்த நாள் - ஜன.22- 1952

ஜெட் விமானம் உலகின் முதன் முறையாக 1952-ம் ஆண்டு ஜனவரி 22-ந்தேதி சேவைக்கு வந்தது.
ஆஸ்திரேலிய மத போதகர் தனது குழந்தைகளுடன் ஒரிசாவில் எரித்துக்கொள்ளப்பட்ட நாள் - ஜன.22- 1999

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கிறிஸ்தவ மதப் போதகர் கிரஹாம் ஸ்டைன்ஸ் மற்றும் தனது இரண்டு குழந்தைகள் மர்ம மனிதர்களால் உயிருடன் எரித்துக்கொல்லப்பட்டனர்.
திரிபுரா, மேகாலயா, மணிப்பூர் ஆகியவை இந்தியாவின் மாநிலங்களான நாள் - ஜன.21- 1972

திரிபுரா, மேகாலயா, மணிப்பூர் ஆகிய மூன்றும் இந்தியாவின் தனி மாநிலங்களாக ஆக்கப்பட்ட நாள்.
சாம் என்ற பெண் குரங்கு விண்வெளிக்கு பயணமான நாள் - ஜன.21- 1960

சாம் என்ற பெண் குரங்கு மெர்க்குரி என்ற விண்கலம் மூலம் விண்வெளிக்கு பயணமானது.
அமெரிக்க அதிபர்கள் பதவி ஏற்கும் தினம் - ஜன.20- 1937

அமெரிக்காவில் நான்கு வருடங்களுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்பட்டு அதிபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
முதல் அதிகாரபூர்வமான கூடைப் பந்தாட்ட போட்டி மசாச்சூசெட்டில் இடம்பெற்ற நாள்: 20-1-1892

கூடையைத் தொங்கவிட்டு அதில் பந்தை போட முயன்று விளையாடியதில் 1891-ல் இந்த விளையாட்டு பிறந்தது. பின்னர், 1892ம் ஆண்டு ஜனவரி 20-ந்தேதி அதிகாரபூர்வமான ஆட்டம் நடைபெற்றது.