புதுதில்லி இந்தியாவின் தலைநகரமாக்கப்பட்ட நாள் - பிப்.10, 1931

இந்திய நாடு, ஆங்கிலேயரின் ஆட்சிக்குட்பட்டிருந்தபோது 1911-ம் ஆண்டிற்கு முன், கல்கத்தாவே இந்தியாவின் தலைநகராக விளங்கியது.
கைப்பந்து போட்டி கண்டுபிடிக்கப்பட்ட நாள் - பிப்.9- 1895

கைப்பந்தாட்டம் அல்லது கரப்பந்தாட்டம் (volleyball) என்பது ஒரு அணிக்கு ஆறு பேர் வீதம், வலைக்கு இருபுறமும் நின்று கைகளால் பந்தைத் தட்டி எதிர்ப்பக்கம் அனுப்பும் விளையாட்டு ஆகும்.
அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி. ஜி. பொன்னம்பலம் இறந்த தினம் - பிப்.9- 1977

ஜி.ஜி. பொன்னம்பலம் எனப்படும் கணபதி காங்கேசர் பொன்னம்பலம் இலங்கைத் தமிழர்களின் நலன்கருதித் துவக்கப்பட்ட அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் கட்சியின் நிறுவனர் ஆவார்.
போர்ச்சுக்கலில் போயிங் 707 விமானம் விபத்தில் 144 பேர் சாவு பிப்.8- 1989

போர்ச்சுக்கலில் போயிங் 707 விமானம் ஒன்று சாண்டா மரியா மலையில் மோதியதில் 144 பேர் பலியானார்கள்.
இஸ்ரேல்- பாலஸ்தீனம் போர் நிறுத்தம் உடன்பாடு பிப்.8- 2005

இஸ்ரேல்- பாலஸ்தீனம் இடையே 2005-ம் ஆண்டு பிப்ரவரி 8-ந்தேதி போர் நிறுத்த உடன்பாடு ஏற்பட்டன.
திரைப்பட நடிகர் குணால் இறந்த தினம் பிப்.7- 2008

காதலர் தினம் படம் மூலம் தமிழ் படத்தில் அறிமுகமானவர் குணால். இவர் 2008-ம்ஆண்டு பிப்ரவரி 7-ந்தேதி மும்பையில் உள்ள அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.
சுவிட்சர்லாந்தில் பெண்களுக்கு வாக்குரிமை கிடைத்த நாள் பிப்.7- 1971

சுவிட்சர்லாந்தில் பெண்களுக்கு முதன் முறையாக வாக்குரிமைக்கு அனுமதிக்கப்பட்டனர். இதேதேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:- * 1807 - நெப்போலியனின் பிரெஞ்சுப் படைகள் ரஷ்யா மற்றும் புரூசியாப் படைகளின் மீது போலந்தில் தாக்குதலைத் தொடங்கினர்.
உலகின் பிரபல பாப் பாடகரான பாப் மார்லி பிறந்த தினம் பிப்.6, 1945

யமேக்கா ரெகே இசைக்கலைஞரும், இசைப் பாடகருமான பாப் மார்லி 1945-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இதே தேதியில் ஜமைக்காவில் பிறந்தார்.
அப்பல்லோ 14 விண்கலம் சந்திரனில் தரையிறங்கிய நாள் -பிப்.5- 1971

அமெரிக்காவால் சந்திரனில் ஆய்வு செய்வதற்காக உருவாக்கப்பட்டது. இந்த விண்கலம் 1971-ம் ஆண்டு பிப்ரவரி 5-ந்தேதி அலன் ஷெப்பர்ட், ரூசா, எட்கார் மிட்ச்செல் ஆகியோருடன் சந்திரனில் தரையிறங்கியது.
இந்திய ஆன்மிகக் குரு மகேஷ் யோகி இறந்த தினம் - பிப்.5- 1917

ஆழ்நிலை தியானத்தை இந்தியாவிலும் மேற்கத்திய நாடுகளிலும் புகழ்பெறச் செய்த ஆன்மிகக் குரு மகேஷ் யோகி
இலங்கை விடுதலை அடைந்த நாள் - பிப்.4, 1948

ஆங்கிலேயரின் 133 ஆண்டுகால ஆட்சிக்குப் பின்னர் 1948-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இதே தேதியில் இலங்கை விடுதலை பெற்றது.
பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் தலைவராக யாசர் அரபாத் பதவியேற்ற நாள் - பிப்.4, 1969

1969-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இதே தேதியில் பாலாஸ்தீன விடுதலை இயக்கத்தின் மூன்றாவது தலைவராக யாசர் அரபாத் நியமிக்கப்பட்டார்.
சந்திரனில் தரையிறங்கிய முதலாவது விண்கலம் என்ற பெயரை பெற்ற சோவியத் விண்கலம் லூனா 9 - பிப்.2- 1966

சோவியத் விண்கலம் லூனா-9 முதன் முதலாக சந்திரனில் தரையிறங்கியது.
தென்னாட்டு பெர்னாட்ஷா அண்ணாவின் நினைவலைகள்..

தமிழக மக்களால் ‘தென்னாட்டு பெர்னாட்ஷா’ என்று அன்பொழுக போற்றப்படும் பேரறிஞர் அண்ணாவின் நினைவு தினமான இன்று அவரது கலை மற்றும் அரசியல் வாழ்வின் நெடும்பயணத்தின் சிறுதுளிகளை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வதில் ‘மாலை மலர்.டாட் காம்’ பெருமகிழ்ச்சி அடைகின்றது.
ஜெமினிகணேசன் உதவியால் எனக்கு வாய்ப்பு கிடைத்தது- கமலஹாசன் வெளியிட்ட தகவல்

பாலசந்தர் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது எப்படி என்பதை, கமலஹாசன் விளக்கினார். "என்னுடைய திரை உலகத் தந்தை அவர்'' என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
அறிவியல் தமிழ் வளர்த்த பா.வெ. மாணிக்க நாயக்கர் பிறந்த தினம்: 2-2- 1871

பா. வே. மாணிக்க நாயக்கர் சேலம் மாவட்டம் பாகல்பட்டி என்னும் சிற்றூரில் 1871-ம் ஆண்டு பிப்ரவரி 2-ந்தேதி பிறந்தார்.
ஜெர்மனி நாடாளுமன்றத்தை ஹிட்லர் கலைத்த நாள்: 2-2-1933

ஜெர்மனி நாடாளுமன்றத்தை ஹிட்லர் கைலத்த நாளாகும்.
சோவியத் ஒன்றியத்தை ஐக்கிய இராஜ்ஜியம் அங்கீகரித்த நாள்: 1-2-1924

ரஷ்யா அதன் அருகில் உள்ள நாடுகளை இணைத்து சோவியத் ஒன்றியமாக விளங்கியது.
பழம்பெரும் நடிகர் நாகேஷ் மறைந்த தினம்: 31-1-2009

பழம்பெரும் நடிகர் நாகேஷ் உடல்நிலை சரியில்லாமல் 2009-ம் ஆண்டு ஜனவரி 31-ந்தேதி காலமானார்.
அண்ணல் காந்தியடிகள் நினைவு நாள்: 30-1-1948

மகாத்மா காந்தி என்று அழைக்கப்படும் மோகன்தாஸ் காந்தி 1869-ஆம் ஆண்டு அக்டோபர் 2-ந் தேதி குஜராத் மாநிலம் போர்ப்பந்தரில் கரம்சந்த் காந்தி-புத்லிபாய் தம்பதியருக்கு மகனாக பிறந்தார்.