
சரோஜினி சட்டோபாத்தியாயா, (பின்னாளில் சரோஜினி நாயுடு) இந்தியாவின் ஹைதாராபாத் மாநிலத்தில் ஒரு வங்காள குலின் பிராமணக் குடும்பத்தில் மூத்த மகளாக 13 பிப்ரவரி 1879-ல் பிறந்தார். இவர் இவரது குடும்பத்தின் 8 குழந்தைகளில் மூத்தவராவார். இவரது தந்தை விஞ்ஞானியும் தத்துவவியலாளரும் கல்வியாளராகவும் விளங்கிய அகோர்நாத் சடோபத்யாயா. இவரது தாய் பரத சுந்தரி ஒரு பெண் கவிஞர் ஆவார். இவரது தந்தை நிஸாம் கல்லூரியின் நிறுவனர் ஆவார். மேலும் இவரது நண்பர் முல்லா அப்துல் காமுடன் இந்திய தேசிய காங்கிரசின் முதல் உறுப்பினராக விளங்கினார். அவர் பின்னர் அரசியலில் ஈடுபட்டதற்காக அவரது தலைமை ஆசிரியர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார்.
12 ஆவது வயதில் சரோஜினி நாயுடு அவரது மெட்ரிகுலேஷன் பரீட்சையில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் தேர்ச்சி பெற்றார். அவர் மாநில அளவில் முதலிடம் பெற்றார். 1891 முதல் 1894 வரை அவர் தன்னுடைய படிப்பில் சிறு இடைவெளி விட்டு, பல்வேறு தலைப்பிலான புத்தகங்களைப் படித்தார். 1895-ம் ஆண்டு, பதினாறு வயதில் முதன் முதலாக நிஜாம் அறக்கட்டளையின் உதவித்தொகை லண்டனிலுள்ள கிங்ஸ் கல்லூரி மற்றும் கேம்பிரிட்ஜ் கிர்டன் கல்லூரியில் மூலம் படிப்பதற்காக சென்றார்.
உருது, தெலுங்கு, ஆங்கிலம், பாரசீகம், பெங்காலி ஆகிய மொழிகளைப் பேச சரோஜினி நாயுடு கற்றுக்கொண்டார். அவருக்கு பிடித்தமான கவிஞர் பெர்சி பைஷ் ஷெல்லி ஆவார்.
இங்கிலாந்தில் தங்கியிருந்த போது தனது 17 வயதில் முத்யாலா கோவிந்தராஜுலு நாயுடு என்ற ஒரு பிராமணர் அல்லாத தொழில்ரீதியான ஒரு மருத்துவரை சந்தித்து, அவரைக் காதலித்து தனது 19-வது வயதில் திருமணம் செய்து கொண்டார். 1898-ம் ஆண்டு சட்டப்படி சென்னையில் அவர்கள் திருமணம் செய்து கொண்டனர். சாதியிடை திருமணங்கள் அனுமதிக்கப்படாத காலகட்டத்தில் அவரை திருமணம் செய்து கொண்டார். அதற்கு முற்போக்கு சிந்தனையுள்ள அவரது தந்தையின் ஒப்புதலும் கிடைத்தது. அவரது திருமண வாழ்கை மகிழ்ச்சிகரமானதாக இருந்தது. *ஜெயசூர்யா, பத்மஜா, ரந்தீர், லீலாமணி என அவர்களுக்கு நான்கு குழந்தைகள் பிறந்தனர். பின்னர் அவரது மகள் பத்மஜா மேற்கு வங்காளத்தின் ஆளுனர் ஆனார்.
1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 15 ஆம் நாள் இந்தியா சுதந்திரம் பெற்றதற்குப் பிறகு அவர் யுனைட்டட் ப்ரொவின்சஸ் (தற்போது உத்தரப்பிரதேசம் என்று அழைக்கப்படுகிறது)-ன் ஆளுனராக பதவியேற்றார். இதன் வழியாக இந்தியாவின் முதல் பெண் ஆளுனரானார்.
மார்ச் 2, 1949 அன்று மாரடைப்பால் அவர் மரணமடைந்தார்.