
இதே நாளில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-
* 1950 - இந்தியா குடியரசு நாடானது. ராஜேந்திர பிரசாத் அதன் முதலாவது குடியரசுத் தலைவரானார். * 1952 - பிரித்தானிய மற்றும் எகிப்திய உயர் வகுப்பு வர்த்தகர்களுக்கெதிராக எகிப்தில் இடம்பெற்ற வன்முறைகளில் கெய்ரோ நகரத்தின் நடுப்பகுதி தீயினால் சேதமாக்கப்பட்டது. * 1958 - ஜப்பானிய பயணிகள் கப்பல் தெற்கு அவாஜி தீவில் மூழ்கியதில் 167 பேர் கொல்லப்பட்டனர். * 1962 - ரேஞ்சர் 3 விண்கலம் சந்திரனை ஆராய்வதற்காக விண்ணுக்கு ஏவப்பட்டது.
* 1965 - இந்தி இந்தியாவின் அதிகாரபூர்வ மொழியானது. * 1980 - இஸ்ரேலும் எகிப்தும் தூதரக உறவை ஆரம்பித்தன. * 1983 - லோட்டஸ் 1-2-3 வெளியிடப்பட்டது. * 1992 - ரஷ்யாவின் அணுஆயுத ஏவுகணைகள் ஐக்கிய அமெரிக்க நகரங்களை நோக்கி செலுத்தப்படமாட்டா என அதிபர் பொரிஸ் யெல்ட்சின் அறிவித்தார். * 2001 - குஜராத் நிலநடுக்கத்தில் 20,000-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். * 2006 - வெஸ்டர்ன் யூனியன் நிறுவனம் தொலைத்தந்தி மூலமான தனது சேவைகளை நிறுத்திக் கொண்டது.